Wednesday, September 7, 2011

கழகத்தில் கால்வாய் வெட்டியவர் அரங்கேற்றிய ரகசிய திருவிளையாடல்கள் பற்றிய கிசு கிசு

நம்மில் பலபேருக்கும் கால்வாய் வெட்டி ஆட்டையை போட்டவரின் முகத்தை பார்த்தாலே ஒரு ஜென்டில்மேன் என்று தான் சொல்ல வரும். ஆனால் உணமையில் அண்ணாத்தே எம்சிஆர் படங்களில் நம்பியார் பண்ணுகிற வில்லத்தனத்தை விட மோசமான வில்லத்தனங்களை யாருக்கும் தெரியாமல் கழக குடும்பத்தில் அரங்கேற்றி இருக்கிறார் என்பது இன்னும் யாரும் புற்றிந்திட முடியாத புதிராக தான் இருக்கிறது. பின்ன கழக தந்தையின் கைதின் போது கூடவே கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தலைமையின் குடும்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர் அல்லவா. ஆனால் பட்சி சொல்லுகிறபடி பார்த்தால் அண்ணன் அப்பவே ரெட்டை வேடம் போட்டு கொண்டு தான் அலைந்தாராம். அப்போதிருந்தே எதிர் முகாமுக்கு தகவல்களை தலைமைக்கே தெரியாமல் கடத்துவதில் அண்ணன் பயங்கர கில்லாடியாம். கூடவே அவரோட சம்பந்தியும் அதிமுகவை சேர்ந்த கல்வி தந்தை என்பதால் அவருக்கு மன்னாரன் கம்பெனி சின்னம்மாவோடு தொடர்பை பலப்படுத்தி கொள்வத்து ரொம்ப எளிமையாக இருந்தத்து. கழக தந்தையின் கைதின் போது கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தந்தையின் மனசாட்சியின் குடும்பத்தோடு நெருக்கமான அண்ணன் அப்படியே கேடி சகோதர்களை கழக தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடும் வேலையையும் நன்றாக செய்து வந்தாராம்.

அதிலும் அண்ணனுக்கு கழக தந்தையின் துணைவியாரின் குடும்பத்தை கண்டாலே ஆகாதாம். அதுவும் மனசாட்சியின் இளைய வாரிசின் பதவி பறிக்க பட்டபோது அவர் வைத்திருந்த தொலை தொடர்பு துறை அமைச்சகத்தை அண்ணன் எப்படியாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது அதில் மண் அள்ளி போடும் விதமாக கழக தந்தையின் மொழி வாரிசு அந்த அமைச்சகத்தை தனக்கு நம்பிக்கை உரியவராக கருதிய பெரம்பலூர் அரசருக்கு வாங்கி கொடுத்ததில் அண்ணன் ரொம்பவே அப்செட் ஆனாராம். ஆனால் உண்மை என்னன்னா கழக தந்தை ஆரம்பத்தில் தொலை தொடர்பு துரையை கால்வாய் வெட்டியவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அண்ணன் கால்வாய் வெட்டியதில் போட்ட பகாசுரதனமான ஆட்டையை பிரதமர் அலுவலகம் மூலம் தெரிந்து கொண்டதால் அந்த முடிவை மாற்றி விட்டு தன்னுடைய மொழி வாரிசின் முடிவையே ஏற்று கொண்டார்.

அப்போதிலிருந்தே இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி அண்ணனுக்கு அதிகமாக தொடங்கியது. அப்ப அண்ணனின் கையில் பலம் வாய்ந்த ஆயுதமாக கிடைத்தது தானாம் 2G அலைக்கற்றை விவகாரம். ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறைக்கு அரசனானதும், அவரை பற்றிய இல்லாததும் பொல்லாததுமான தகவல்களை மனசாட்சியின் இளவல்களுக்கு கடத்துவதையே தன்னுடைய பிறவி பயனாக கருதி கொள்ள ஆரம்பித்தார். ஆண்டியப்பனின் மகன், மனசாட்சியின் இளவல்களின் பல முடிவுகளை மாற்றி விட்டார் என்றும், இளவல்களுக்கு எதிராக கழக தந்தையின் குடும்பத்தில் காய் நகர்த்துகிறார் என்றும் மனசாட்சியின் இளவல்களுக்கு தூபம் போட ஏற்கனவே பதவியை இழந்த கடுப்பில் இருந்த இளவல், ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறையில் இளவல் செய்த பல குளறுபடிகளையும் அதற்கு ஆதராமான சாட்சியங்களையும் வெளியே தெரியாமல் மறைத்து இளவலை காப்பாற்றிய உண்மை கூட தெரிந்து கொள்ள முயலாமல், ஆண்டியப்பனின் மகனையும், மொழி வாரிசையும் சிக்கலில் மாட்டி விட வேண்டி 2G அலைக்கற்றை விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கினர்.

அதோடு மட்டும் இல்லாமல், அதை பற்றிய விவரங்களை ஈழத்தின் தாயிடம் தனது மன்னாரன் கம்பெனி தொடர்புகள் மூலம் கொண்டு போய் சேர்த்தவர் நம்ம கால்வாய் வெட்டி ஆட்டையை போட்ட அண்ணன் தானாம். கடைசியில் 2G அலைக்கற்றை விவகாரமே கழகம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மண்ணை கவ்வ துணைபோன காரணங்களில் முக்கியமான ஒன்றாகி போனது. அண்ணன் செய்த அப்பெரிய உதவிக்கு செய்யும் நன்றி கடனாக தான் அண்ணன் சென்னையை சுற்றியும் மற்றும் தமிழகமெங்கும் பண்ணிய நில முறைகேடுகளையும், தொழில் முதலீடுகளையும் தற்போதைய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது . இனி அப்படி எதுவும் நடந்தால் அண்ணனின் பெயர் கழக தந்தையிடம் மேலும் கேட்டு போகாமல் இருக்க “ நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன்” என்பது போன்ற நாடகமாக தான் இருக்கும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அண்ணனை விட்டால் எதிர் முகாமின் நம்பிக்கைகுரிய ஆள் உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இல்லையாம்

என்னவோ போங்கையா நீங்களும் உங்க உட்குத்து அரசியல்களும். கத்தியை எடுக்கிறவனுக்கு கத்தியால தான் சாவு என்பதை புரிந்து கொண்டால் சரி

No comments:

Post a Comment