Friday, September 23, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் என்னும் பயங்கரத்திற்குள் புதைந்து கிடக்கும் அபாய முடிச்சுக்கள்

சமீப காலமாக உலகம் முழுக்க அணுமின் நிலையங்களுக்கு எதிரான எதிர்ப்பு, விழிப்புணர்வு பெற்ற பொது மக்களிடையே பரவி வருவது அனைவரும் அறிந்ததே ... அது மகிழ்ச்சிக்குரிய விடயமும் கூட. அதில் தமிழக மக்களும் குறிப்பாக கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களும் விதி விலக்கல்ல. சொல்ல போனால் அணு மின் நிலையங்களுக்கான எதிர்ப்பை துவங்கியதில் கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை முன்னோடிகள் என்று கூட சொல்லலாம். அதே சமயத்தில் இந்த அனுமின்நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஆரம்ப காலம் தொட்டே தன்னை இணைத்து கொண்டு அதை பற்றிய விழிப்புணர்வை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியவர் வைகோ (அவரது அரசியல் வாழ்வு என்பது எவ்வளவு கேலிக்குரியதாக இருந்தாலும்) அவர்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

சரி இப்போ விடயத்திற்கு வருவோம் , அப்படி என்ன மாதிரியான முடிச்சுக்கள் இந்த அணுமின் நிலையத்திற்குள் புதைந்து கிடக்கின்றன என்று நாம் தெரிய வேண்டுமென்றால் , நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகளுக்கிடையே பின்னி பிணைந்து கிடக்கும் தொடர்புகளையும் அதனுள் புதைந்து கிடக்கும் முடிச்சுக்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


அமெரிக்க சோவியத் பனிப்போர் – இந்திராவின் சோவியத் ஆதரவு – இந்திராவின் வெளிநாட்டு கொள்கையின் மீதான அமெரிக்க அரசின் கசப்பு – இந்திய பெருங்கடலின் மீதான வல்லரசுகளின் ஆதிக்க போர் – ஈழ போராட்டம் – ஈழத்தின் திரிகோணமலையின் ராணுவ முக்கியத்துவம் – சோவியத் அரசுடனான ராசீவ் காந்தியின் அணு உலை அமைப்பதற்கான உடன்பாடு – கூடங்குளம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் – சோவியத்தின் கடைசி காலங்களில் அரசு அதிகார மட்டங்களில் ருசிய மாபியாக்களின் ஆதிக்கம் – சோவியத்தின் சிதறல் - ருசிய மாபியாக்களுக்கும் இசுரேலின் உளவு நிறுவனமான மொசாட்டுக்குமான தொடர்பு – ருசியாவின் உளவாளியாக செயல்பட்டவரின் மகள் சோனியா – போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு - தேர்தலில் ராசீவின் தோல்வி – இராக் யுத்தத்தில் அமெரிக்க விமானங்கள் பெட்ரோல் நிரப்ப ராசீவின் எதிர்ப்பு – சந்திரசேகரின் அரசு ராசீவினால் கவிழ்ப்பு – ராசீவ் மீதான அமெரிக்க அரசின் கோபம் - ராசீவின் கொலை – ராசீவ் கொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதி – விடுதலை புலிகளின் மீதான குற்றச்சாட்டு – ஈழ படுகொலை – ருசிய மாபியாக்களின் யூத தொடர்பு – அமெரிக்காவின் மீதான யூத குழுக்களின் ஆதிக்கம் – அமெரிக்க பொருளாதரத்தின் ஆட்டம் – புதிய உலக அரசியல் சூழல் – கூடங்குளம் அணு மின் நிலைய கட்டுமான பணிகளின் வேகம்

நேருவின் வழிநடத்துதலில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்து கொண்டு உலக வல்லரசுகளின் வல்லாதிக்க போட்டியில் பங்கெடுத்து கொள்ளாமல் நடுநிலை வகித்து அமெரிக்க சோவியத் நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் சிக்கி கொள்ளாமல் தன்னை காத்து கொண்ட இந்தியா, நேருவின் மகள் இந்திராவின் காலத்தில் சோவியத் சார்பாகி விட, அத்தோடு இந்தியாவின் நடுநிலைமையும் அம்மணமாகி போனது. அது மட்டுமா மற்றொரு உலக தாதாவான அமெரிக்காவின் பகையையும் கூடவே சேர்த்து சம்பாதித்து கொண்டது. அந்த பகை தான் காலிசுதானிலிருந்து இருந்து காசுமீர் வரை முடிச்சுகளை போட்டு விட்டது. கடைசியில் காலிசுதானின் குண்டிற்கும் இந்திராவை இறையாக்கியது. வல்லரசும் பழியை அப்பாவி சீக்கியர்கள் மீது போட்டு தப்பித்து விட்டது. சரி அம்மாவிற்கு புகட்டப்பட்ட பாடத்தில் இருந்து தனயன் கற்று கொள்வான் என்று பார்த்தால் தனயன் “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்ற பழமொழிக்கேற்ப சோவியத்துடனான உறவை மேலும் வலுவாக்க, அமெரிக்காவின் எதிரியை கண்காணிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட உளவு ரேடாரின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே பழைய சோவியத் ருசியாவின் உளவாளியாக செயல்பட்டவரின் மகளை மணந்தவர் என்ற கூடுதல் தகுதியும் இந்திராவின் மீதிருந்த கோபத்தை விடவும் ராசீவின் மீதான அமெரிக்காவின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் அமெரிக்காவின் கோபத்தை மேலும் தூண்டி விட காரணமாக இருந்தது தான் ராசீவின் சோவியத்துடனான கூடங்குளம் அணு மின்நிலைய ஒப்பந்தம். அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை தெற்காசியாவின் மீதான தனது கட்டுப்பாட்டிற்கு எழுந்த சவாலாகவே கருதியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சந்தேக கண்ணோடு பார்த்தது மட்டுமின்றி அமெரிக்கா பல தளங்களிலும் இருந்து, சோவியத்துடனான அந்த அணு மின் நிலைய ஒப்பந்தத்தை கைவிடுமாறு, ராசீவை மிரட்டியது என்றே சொல்லலாம். இந்த நிலையில் சோவியத் உள்நாட்டு பொருளாதர அரசியல் சிக்கலில் சிக்கி கொள்ள ராசீவுடைய அரசும் அந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டது. அதற்கு பிறகு முன்னாள் சோவியத்தின் அதிகார மையம் ருசியாவுக்கு கைமாறியது. இங்கு மற்றொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் பழைய சோவியத்தின் கூட்டு நாடுகளை இழந்து புதிதாக உருவான ருசியா, கம்முனிட்டுகளின் வீழ்ச்சிக்கு பிறகு மாபியா கும்பல்களால் கட்டுப்படுத்தப்படும் நிலை உருவானது.

இந்த மாபிய கும்பல்கள் சோவியத் கூட்டாட்சி அதன் கடைசி காலகட்டத்தில் இருக்கிறபோதே சோவியத்தின் அணைத்து அதிகார மட்டங்களிலும் ஊடுருவி விட்டது. அந்த கும்பல் சோவியத் பலவீனமடைந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ருசியாவில் உள்ள அரசு தொழிற்கூடங்களையும், நிறுவனங்களையும் அதிகார பீடங்களின் மீது கொண்டிருந்த தனது கட்டுப்பாட்டை வைத்து அசூர பலத்தோடு கைப்பற்ற தொடங்கியது. பழைய சோவியத் அரசால் வெளி நாடுகளோடு ஏற்படுத்தப்பட்ட பல தொழில் துறை ஒப்பந்தங்களும் மாபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்படி ருசிய மாபியாக்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்களில் ஓன்று தான் கூடங்குளம் அணு மின்நிலைய ஒப்பந்தம். எப்படி உலக பொருளாதாரத்தை யூத குழுக்கள் கட்டு படுத்தி கொண்டு இருக்கிறதோ அதே போன்று தான் ருசியாவின் பொருளாதாரம் முழுவதும் ருசிய மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ருசிய மாபியாக்களுக்கு இசுரேலின் மொசாட் உளவு துறையோடும் தொடர்புகள் உண்டு. அது இசுரேலிற்கு குடியெறிய ருசிய யூதர்களின் உதவியோடு சாத்தியமானது. அது மட்டுமில்லாமல் ராசீவின் போபர்ஸ் ஊழலில் சம்பந்தப்பட்ட சோனியாவின் உறவினரான குத்ரோச்சிக்கு அமெரிக்க உளவு துறையினரோடு மட்டுமின்றி ருசிய மாபியாக்களோடும் தொடர்பு உண்டு. அமெரிக்கா தனது அரசு இயந்திரத்தை வைத்து உலக நாடுகளை மிரட்டுகிறதென்றால் இந்த ருசிய மாபியாக்கள் ருசிய அரசை கொண்டும் தங்களுடைய தனிப்பட்ட உலக தொடர்புகளை கொண்டும் உலகின் பல்வேறு அதிகார மையங்களையும் மிரட்டுகிறது என்பது தான் எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.
சரி இப்ப கூடங்குளத்தில் ருசிய மாபியாக்களுக்கு என்ன வேலை என்று பலரும் கேட்கலாம். பின்ன சொந்த நாட்டின் சொத்துக்களையே சூறையாடுகிற ருசிய மாபியாக்களுக்கு மற்றொரு நாட்டில் பல ஆயிரம் கோடி வருவாயை அவர்களுக்கு தரும் ஒரு ஒப்பந்தம் என்றால் சும்மா விடுவார்களா. கடைசி காலங்களில் சோவியத் தனது பலத்தை இழந்து கொண்டிருந்த சூழலில் பொருளாதார சிக்கலிலும் சிக்கி சட்டினி ஆகி கொண்டு இருக்க, உலகநாடுகளின் மத்தியில் தனிக்காட்டு ராசாவாக மாறிய அமெரிக்கா ராசீவிடம் கூடங்குளம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொல்ல, சோவியத்தை தங்களது கட்டுப்பாட்டில் சிறிது சிறிதாக கொண்டு வந்து கொண்டிருந்த ருசிய மாபியாக்களோ அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த நிர்பந்திக்க, ராசீவோட நிலைமை புலிவாலை பிடித்த கோமாளியின் கதையாக மாறியது. இதற்கிடையில் ராசீவ் போபர்சு ஊழலில் சிக்கி அடுத்து நடந்த தேர்தலில் ஆட்சியை இழக்க அவரது தலை தற்காலிகமாக தப்பியது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் இந்தியாவில் அரசியல் தேக்க நிலையை கொண்டு வந்தால் தான் குழம்பிய குட்டையில் தன்னால் மீன் பிடிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா அத்வானி என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது. அப்படி அமெரிக்காவின் இந்திய முகவராக உருவாக்கப்பட்ட அத்துவானியின் கையில் கொடுத்து அனுப்பப்பட்டது தான் ராமர் கோவில் பிரச்சினை. அது கூட இந்துக்களின் ஒட்டு வங்கியை கைப்பற்ற ராசீவால் மறைமுகமாக தூண்டி விட கையிலெடுக்கப்பட்டது தான். ஆனால் அத்வானி அதை கையில் எடுத்து இந்துக்களின் ஒட்டு வங்கியை கைப்பற்றியது “காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளி கொண்டு போன” கதையாக மாறியது. இதற்கிடையில் இந்தியா வி.பி.சிங், சந்திரசேகர் என அடுத்தடுத்து புதிய பிரதமர்களை கண்டது. அவர்களில் சந்திரசேகர் அப்போதைய நிலையில் அமெரிக்காவை பகைக்காமல் அதன் முகவராகவே மாறி போனார் என்பதற்கு ஈராக் யுத்தத்தில் அமெரிக்க விமானங்களை மும்பையில் பெட்ரோல் நிரப்ப அனுமதித்ததை எடுத்துகாட்டாக கொள்ளலாம்.

அமெரிக்க சார்பு நிலையை இந்தியா எடுப்பதை விரும்பாத ருசிய மாபியாக்கள் ராசீவ் மூலமாக சந்திரசேகர் அரசை கவிழ்க்க, அது ராசீவின் மீதான உக்கிரத்தை அமெரிக்காவிற்கு அதிகரிக்கவே செய்தது. ஏற்கனவே கூடங்குளம் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீறி செயல்பட்ட ராசீவ் இப்போது அமெரிக்க சார்பு இந்திய அரசை கவிழ்த்து விட்டதால், அமெரிக்க அதிகார வர்க்கம் ராசீவ் வாழ தகுதியற்றவர் என்று எண்ணியதின் விளைவு தான் ராசீவுடைய கொலைக்கான பின்னணிகளில் ஓன்று. “பழி ஓரிடம் இடம் பாவம் ஓர் இடம்” என்பது போல் விடுதலைப்புலிகள் இந்த சிக்கலில் மாட்ட வைக்கப்பட்டனர் என்பது தான் வேதனைக்குரிய உண்மை. பின்ன அந்த சிக்கலின் தொடர்ச்சி ஒரு இனப்படுகொலைக்கு கால்கோள் இட்டதென்றால் வேதனை கொள்ளாமலா இருக்க முடியும். அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத்தை செயல்படுத்த காலதாமதப்படுத்தியதால் ருசிய மாபியாக்களுக்கு ராசீவ் மீது ஏற்பட்ட வெறுப்பு கூட ராசீவின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ராசீவின் கொலையில் மொசாட்டின் கையும் இருக்கலாம் என்பது அப்போது பேசப்பட்ட ஓன்று. ஆக மொத்தத்தில் ராசீவ் கொலை என்பது “தங்களுக்கு இனி இவன் பயன்படமட்டான்” அல்லது “இவனை விட்டு வைத்தால் தங்களது குட்டு வெளிப்பட்டு விடும்” என்ற அடிப்படையில் சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட கூட்டு சதியே என்பதில் எந்த ஐயமும் கிடையாது.இப்போது மறுபடியும் கூடங்குளத்திற்கு வருவோம், ஏற்கனவே கூடங்குளம் ஒப்பந்தம் போடப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளை நெருங்குகிற சமயத்தில். ருசிய மாபியாக்கள் அமெரிக்க அரசு பீடத்தில் உள்ள தங்களது யூத தொடர்புகளை பயன்படுத்தி பழைய சோவியத் அரசு இந்தியாவோடு ஏற்படுத்திய அணுமின் நிலைய திட்டத்தில் இந்தியா மீதான அமெரிக்கா அரசின் அழுத்தத்தை வலுவிழக்க செய்ய, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான கட்டுமான பணிகளும் வேகமெடுக்க ஆரம்பித்தது. இப்ப கவலைக்குரிய விடயமென்னவென்றால் ஏற்கனவே இந்தியாவுடனான ருசிய அரசின் பல ஒப்பந்தங்களிலும் புகுந்து விளையாடுகிற ருசிய மாபியாக்கள் மக்களின் உயிருக்கு உலை வைக்க கூடிய அளவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் மறைமுகமாக தங்களது கையை படர விட்டிருப்பது தான். ருசிய மாபியாக்களுக்கு ஊழல் செய்வதென்றால் கரும்பு தின்ன கூலி கொடுக்கிற கதை தான். அதே போன்று அவர்கள் தங்களுக்கு சாதகமான நிலைகளை கொண்டு வர எல்லா மட்டங்களிலும் பணத்தை பாய்ச்ச தயாராக இருப்பார்கள். ஏற்கனவே இந்திய கப்பற்படையுடனான ஒப்பந்தங்களில் மது, மாது, பணம் என வாரி இறைத்தவர்கள் தான் இந்த ருசிய மாபியாக்கள். அப்படி பட்டவர்களின் பின்னணியில் கூடங்குளம் அமைவதென்பது மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கும் செயலாக இருக்க முடியாது.

இப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் சின்னாபின்னமாகி பழைய சோவியத்தின் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ருசிய மாபியாக்களின் எழுச்சி ஒரு புதுவகையான அச்சுறுத்தலை உருவாக்கி கொண்டு இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையும் கையில் வைத்து கொண்டிருக்கும் யூத குழுக்களுக்கும் ருசிய மாபியக்களுக்குமான உறவு தாய் பிள்ளை உறவு போன்றது என்பதும் இதில் முக்கியமான ஓன்று. பின்ன பெயரளவில் தான் அது ருசிய மாபியா ஆனால் அந்த கும்பல் முழுக்க முழுக்க யூதர்களால் நடாத்தப்படுகிற கட்டமைப்பு தானே. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியிலும் இந்த ருசிய மாபியாக்களுக்கு பங்கு உண்டு என்பது அமெரிக்கர்களே அறிய மறந்த விடயம் என்பது தான் கொடுமை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அனுமின் நிலைய நிர்மாண பணிகளில் ஈடுபட்ட ருசிய பொறியியல் வல்லுனர்கள் ஒரு விமான விபத்தில் பலியானது எவ்வளவு பேருக்கு தெரியுமோ என்பது தெரியவில்லை. ஏற்கனவே மர்மமான பல விபத்துக்களின் பின்னணியில் ருசிய மாபியாக்கள் இருப்பது போல் இதிலும் அவர்களுடைய கை இருக்கலாம் என்று சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ஏனென்றால் ருசிய மாபியாக்களின் கடந்த கால வரலாறு அப்படி. ஏற்கனவே இந்தியாவின் அதிகார மையம் முன்னாள் சோவியத்தின் உளவாளியாக செயல்பட்ட ஒருவரின் மகளின் கையில் இருக்க, இந்திய அரசும் இந்த அணுமின் நிலைய திட்டத்தில் வேகம் காட்டுவது இந்திய அதிகார மட்டத்தில் ருசிய மாபியாக்களின் ஊடுருவலையே காட்டுகிறது.

எனக்கென்னவோ உலகம் இப்போது நாடுகளின் எல்லைகளை கடந்து செயல்படுகிற மாபியாக்களின் கைக்கு சிறிது சிறிதாக சென்று கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதன் தொடர்ச்சி தான் அத்திட்டத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியை கண்ட பிறகும் இந்தியாவிற்கான ருசிய தூதர் சமீபத்தில் விடுத்த பயறுருத்துதலின் பின்னணியும் உள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியும் கூடங்குளத்தில் மட்டுமின்றி நாடு முழுக்க பரவுவது மிக அவசியம். உலகமயமாக்கல் என்பது உலகில் தற்போது நடந்து வருகிற பொருளாதார சூதாட்டத்திற்கு மூலதனமாகி விட்டதோடல்லாமல் சர்வதேச மாபியாக்களின் குத்தாட்டத்திற்கும் வழி வகுத்து விட்டது என்றே சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகள் இந்த மாபியாக்களால் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுவது சனநாயகத்தை தோல்வியை நோக்கி செலுத்துகின்ற நகர்வுகள் என்றே கருதப்படும்.

2 comments:

teenmoon5 said...

இப்போ வயித்துல வாய்ல அடிசிகிரவங்க அவ்வளவு செலவு பண்ணி கட்டுற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்கன் தெரியல

anthony said...

அங்குள்ள மக்கள் அதை ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதை எதிர்த்து போராடி கொண்டு தான் இருக்கிறாங்க. நாம தான் இவ்வளவு நாளும் தூங்கி கொண்டு இருந்து விட்டு இப்ப போராடுகிற மக்களை கேள்வி கொண்டு இருக்கிறோம். பல பேருக்கு என்னமோ கூடங்குள அனுமின்னிலையத்திற்கு எதிரான போராட்டம் ஏதோ ரெண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது போல் தோன்றுவதை நினைத்தால் நாமெல்லாம் எந்த அளவிற்கு சமூக அக்கறை அற்றவர்களாக இருக்கிறோம் என்பதை தான் காட்டுகிறது. எவனோ தானே பாதிக்க பட போகிறான் என்ற வெறித்தனம் தான் இதற்கெல்லாம் காரணம் தோழர்

Post a Comment