அதுவும் ஏழாம் அறிவு, போதி தருமர் தமிழர் (அவர் காஞ்சி புறத்தை சேர்ந்த புத்த துறவி என்பதை தவிர அவரது பிறப்பு பற்றிய முழு உண்மைகளும் அறியப்படவில்லை என்பது வேறு விடயம்) என்றும், அவரது பெருமை பேசுகிற படம் என்பதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் என்றும் விளம்பரம் வேற. முக்கால்வாசி தமிழனுங்க முதுகெலும்பில்லாத புழுக்களை போல் தான் பார்ப்பனிய குட்டையில் நெழிகிறானுங்க என்பது வேறு விடயம். சரி போதி தர்மரை பற்றி ஒழுங்கா சொல்லி இருக்கிறானுங்கன்னா அதுவும் அரைகுறையாக தான். அவரு ஏதோ போகிற வழியில் புத்த மதத்தை ஏற்று கொண்டவர் போல காட்டி இருக்கிறானுங்க. அனால் அவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து புத்த கொள்கைகளை பரப்பியவர் என்பதையோ, புத்த கொள்கையாளர்கள் ஏற்படுத்திய உலகின் முதல் பல்கலைக்கழகமான நாளந்தாவில் போதித்தவர் என்பதையோ, தமிழகத்தில் புத்த மதம் தளைத்தோங்கி இருந்ததையோ இல்லை காஞ்சிபுரம் தான் தென்னிந்தியாவில் புத்த மதத்தின் தலைமை பீடமாகவும் இருந்தது என்பதை பற்றியோ மூச்சு விடாமல் அப்படியே மூடி மறைத்து விட்டானுங்க. பின்னே புத்த விகாரத்தை இடித்துத்தான் காமகேடிகளின் மடம் கட்டப்பட்டது என்பது போன்ற விவகாரமான செய்திகள் தமிழன் தெரிந்து சுய உணர்வு பெற்று விடக்கூடாதே.
![]() |
From Profile Photos |
இந்த படம் உண்மையிலேயே போதி தர்மர் பற்றிய பெருமைகளை பேசும் படம் என்றால் அப்படத்தில் போதி தருமரை கொண்டாடுகிற சீனர்களை வில்லனாக காட்டுவதற்கு பதில் ஏதாவது நல்ல பாத்திரத்தில் காட்டி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சீனாக்காரர்களை ஏதோ தமிழர் விரோதி போல் காட்டி இந்திய தேசியத்திற்கு விளக்கு பிடித்து கொண்டே தமிழனின் உணர்ச்சிக்களை முதலீடாக வைத்து காசு பார்க்க முனைந்து இருக்கிறார்கள்.
இடைக்காலத்தில் எத்தனையோ போதி தருமர்களாக திரிந்த தமிழர்களை அவர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாக இருந்த ஒற்றை காரணத்தினால் கழுவிலேற்றி கொன்ற வெறியர்கள் கொண்ட மண் தான் இது என்பதை பற்றி எத்தனை பேர் பேசுவார்கள், அதை எண்ணி வெட்கி நாணுவார்கள். ஒரு போதி தர்மனை ஆதரித்த சீனர்கள் உலக வல்லரசாய், கணக்கிலடங்கா போதி தர்மர்களை கொன்றழித்த இம்மண் வல்லரசுகளின் நிரந்தற அடிமையாய். இதை தான் ஊழி வினை பயன் என்று சொல்வார்களோ.
இப்ப கொஞ்சா நாளா இந்திய தேசியத்துக்கு விளக்கு பிடிக்கிற புண்ணாக்குகள் சீனாகரனையும் தமிழர் விரோதியாக வர்ணம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். தமிழனுக்கும் சீனனுக்கும் ஏதோ பரம்பரை பரம்பரையாக வாய்க்கா வரப்பு தகராறு இருக்கிறது போல். ரெண்டு பேருக்கும் பொதுவான எல்லை கூட கிடையாது. சீனாகாரனிடம் இருந்து காத தூரத்தில் இருக்கிறோம். உடனே சில அல்லக்கைகள் ஈழ தமிழனை அழிப்பதற்கு சிங்களனுக்கு சீனாகாரன் தானே ஆயுதம் கொடுத்தான் என்று துரப்பை தூக்கி கொண்டு வரும்ங்கள். அட பதருகளா இந்தியாவிடம் சரணடைந்து கிடந்ததால் தானே சீனாகாரன் சிங்களனுக்கு உதவி செய்தான். தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு போதி தர்மரை கொண்டாடுகிறவர்களிடம் தமிழன் நேரில் சென்று உதவி கேட்டு இருந்தால் மறுத்திருப்பார்களா என்ன ? . இப்போது தமிழ்நாட்டுக்கும் சேர்த்து அல்லவா விடுதலை வாங்கி தந்து இருப்பார்கள்
.
பள்ளிக்குள் விளையாடி கொண்டிருந்த புத்த சமண பிள்ளைகளை கிள்ளி ..... மன்னிக்க கழுவில் ஏற்றியவனுங்களை பள்ளியை இடித்து கோவிலாக மாற்றி உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியில நின்று பிள்ளைக்காக அழுகிற பொறம்போக்காக தான் தமிழன் திரியுறான். போகி பண்டிகை கூட தமிழர்களின் இலக்கிய ஏடுகளை கொளுத்தி போடும் விழாவாக பார்ப்பனிய வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓன்று என்றும் படித்து இருக்கிறேன். பெரும்பான்மையான அந்த நல்வழி கூறும் தமிழ் இலக்கியங்கள் புத்த சமண கொள்கையாளர்களால் இயற்றப்பட்டவை என்பது குறுப்பிடத்தக்க ஓன்று. இப்படி இவனுங்க துரத்தி விட்ட புத்தத்தையும் சமணத்தையும் கொண்டாடாடுகிறவனுங்க (உபயம் சீனரும், குசராத்தி அடகுக்கடை சைனரும்) வைக்கிற ஆப்பிற்கு வசதியாக குனிந்து கொடுத்து கொண்டு நிற்கிறான் ஈன தமிழன்.
தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்தாமல் இருந்து விட்டு செத்ததற்கு அப்புறம் நல்லா தண்ணிய போட்டுட்டு செத்தவனுக்கு வாயில பாலூத்தி அழுகிறவன் பெயர் தான் தமிழனா . அது புத்தனா இருந்த தமிழனை துரத்தி துரத்தி கழுவில் ஏற்றி கொல்லப்படும் போதும் சரி, ஈழத்தில் கொத்து கொத்தா அறுத்து எறியப்படும் போதும் சரி தமிழன் ஒரே மாதிரியாக தான் இருக்கிறான். இப்ப புதுசா போதி தர்மருக்காக கண்ணீர் வடிக்கிறானுங்க.
பார்ப்பனியத்திற்கு அடி வருடுவதையே பிறவி பயனாக நினைக்கிற பயலுக படம் எடுத்தால் நவக்கிரகத்தோட புனிதம், துளசியின் மகிமை, இடஒதுக்கீடு செய்யும் அட்டூழியம் என்பது போன்ற கருத்துக்களை தான் திணிப்பானுங்க. அதிலேயும் பெரிய கொடுமை என்னவென்றால் அம்பேத்கர், பெரியார், காமராசர் போன்ற போராளிகளின் போராட்டத்தால் விளைந்த பயன்களை அனுபவித்தவனுங்க தான் கருத்து சொல்கிறோம் என்று அவர்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறானுங்க. இவற்றையெல்லாம் பார்க்கும் நேரத்தில் ஐயோ இந்த மொள்ள மாறிகளுக்காகவா அந்த போராளிகள் தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து கொண்டார்கள் என்று நெஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே கனக்கிறது. ஒருவேளை அவர்கள் போராடாமலிருந்தால் இவனுங்க மூதாதையர்களை போல் இவனுங்களும் இப்ப கோவணம் கட்டி கொண்டு தான் அலைந்து இருப்பானுங்க.
இதுல மற்றுமொரு கூட்டம் போதி தர்மரை தமிழனுக்கு அறிமுகப்படுத்திய முருகதாசிற்கு நாம் எல்லாரும் நன்றி கடமைப்பட்டவர்கள் என்ற அளவிற்கு மூளை உருகி கதறுகிறார்கள். அட பாவிங்களா போதி தர்மரை பற்றி படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. அவரை ஏதோ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தபடும் புது கதாநாயகனை போல அல்லவா பாவிக்கிறாங்க. தமிழர்கள் எந்த அளவிற்கு ஞான சூனியமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதை தான் இது போன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. புனையப்பட்ட புராண கட்டுக்கதைகளை வரலாறென்று நம்பி கொண்டு அலையும் கூட்டங்களுக்கு மத்தியில் உண்மையான வரலாறு படுகின்ற பாடு ஈழத்தமிழன் படும்பாட்டை விட கொடுமையாக இருக்கிறது.
அதிலும் முகநூலில் முருகதாசின் புகழ் பாடும் நண்பர் ஒருவரிடம் போதிதர்மரை பற்றி படம் எடுத்து தமிழரை பெருமை படுத்தி இருக்கிறோம் என்று விளம்பரம் செய்யும் முருகதாசு அந்த வரலாறையே திரித்து சொல்லி இருக்கிறாரே என்று கேட்டால், அட போங்க நீங்க அவரு என்ன டாக்குமென்ட்ரியா எடுத்தார், வரலாற்றை பற்றி படம் எடுக்கும் போது அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணினா (கதை டிச்சு கிச்சனின் போது நடிகைங்களிடம் வேண்டி கொள்வது போலவோ என்னவோ) தான் காசு பார்க்க முடியும் . காளிவுட்காரன் கூட சமுராயிகளின் வாழ்வை திரித்து தான் படம் எடுக்கிறான் என்று விளக்கம் கொடுக்கிறார். யோவ்.... காளிவுட்காரன் தானே சாமுராய்களோட வரலாற்றை திரித்து படம் எடுக்கிறான், சாப்பான்காரனா எடுக்கிறான் என்று அறிவு பூர்வமாக கேள்வி கேட்க கூடாது. அப்படி கேள்வி கேட்பது தமிழனுக்கு இழுக்கு என்பது இங்கு எழுதப்படாத சட்டம். காசு பார்ப்பதற்காக நாங்கெல்லாம் பெத்த ஆத்தாளுக்கே புது புருசனையும் புது வரலாற்றையும் கொடுத்து பெருமைபடுவோம் என்று சொல்லி கொள்கிறவனுங்க படம் எடுக்கிற போதும் அதை ஆதரிக்கிறவங்க இருக்கிற போதும் நாம என்ன கத்தினாலும் எடுபடாது
பேசாமா பிள்ளைங்களை (உடனே அந்த சாதிகாரனை மட்டும் தான் பள்ளி கூடத்திற்கு... சீ.. சீ..... திரைப்பட கூடத்திற்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்க கூடாது) பள்ளி கூடத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக தினமும் எதாவது ஒரு படத்திற்கு நுழைவு சீட்டு எடுத்து திரைப்பட கூடத்திற்கு அனுப்பி விட்டு விடலாம் போல. இலவசமாக கல்வியை குடுத்த ஐயா காமராசர் எல்லா ஊர்களிலும் கட்டாயமாக ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றாமல் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் இப்போதைக்கு இது போதும்.