Sunday, August 14, 2011

இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழும்பும் ஒப்பாரிகள்

ரெண்டு நாளைக்கு முன்பு ஆராக்சன் என்ற இந்தி படத்தை பீகார், உத்தரபிரதேசு போன்ற மாநிலங்கள் தடை செய்து விட்டதாக செய்திதாள்களில் படித்த போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஏன் இத்தனை போராட்டங்கள் ஆதிக்க வெறி பிடித்த சமூகத்தினரால் பல தளங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது என்ற கேள்வி அதை படிக்கும் சமூக நீதியில் அக்கறை உள்ள எவருக்கும் எழவே செய்யும்..... அப்படி எனக்குள்ளே நான் எழுப்பிய கேள்விகளுக்கும் அதற்கான பதில்களையும் உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை ...

பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் கல்வியும் , சமூக உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களுக்கு அவர் தாம் முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு அவர்களையும் எல்லாரையும் போல் கல்வி பொருளாதார நிலைமைகளில் முன்னேற வழி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சமூக அநீதி என்று ஊளையிடும் பார்ப்பனிய ஓநாய்கள்..... சாதியின் பெயரால் தெருவில் நடமாடுவதில் தொடங்கி கோவிலில் நுழைவது வரை பல விதமான இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அடக்கி ஒடுக்கி வைத்திருகின்றனரே..... அதற்கு எதிராக ஏன் இவர்கள் தங்களுடைய வாயை திறப்பதில்லை.... இட ஒதுக்கீட்டால் திறமையான மற்றொருவரின் வாய்ப்பு பறிபோகிறது என்று ஊளையிடும் ஓநாய்கள், தங்களுடைய கடின உழைப்பால் அதிக மதிப்பெண்களுடன் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், போன்ற இந்திய அரசாங்க கல்வி நிறுவனங்களுக்குள் பொதுப்பிரிவில் தேர்வுபெற்ற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சாதியின் பெயரால் மாணவர்கள் என்ற போர்வையில் கூட பயிலும் சாதி வெறியர்களால் அவமானபடுத்தப்படுவது அந்த மாணவனின் கடின உழைப்பை கொச்சை படுத்துவது ஆகாதா.....

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என தனி அறைகளும் ஆதிக்க சமூகதிற்கென தனி அறைகளும் எந்த திறமையை அடிப்படையாக வைத்து ஒதுக்கப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க நூற்றிற்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்... இவ்வளவற்றிற்கும் அவர்களில் பலரும் பொது பிரிவினரோடு போட்டியிட்டு தேர்வு பெற்றவர்கள்......தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரே, அதற்கு இந்த பார்ப்பனிய வெறியர்கள் என்ன சொல்ல போகிறார்கள்..... அவர்கள் எல்லாம் தகுதியானவர்கள் கிடையாதா......

உலகத்திலேயே சிறப்பாக வாந்தி பண்ணி கக்குவதற்கு கொடுக்கப்படும் மதிப்பெண்களால் மாணவர்களின் திறமையை மதிப்பிடுவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..... அதுவும் ஒன்றிரெண்டு மதிப்பெண்களை வைத்து மாணவர்களில் திறமையானவர்களை வகைப்படுத்துவது என்பது தான் மிக கேவலமான விடயம்.... முன்னேறிய நாடுகளில் மதிப்பெண்கள் மாணவர்களை ஏ, பி, சி என்று தரப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும் ..மற்றபடி ஒரு மாணவரின் மதிப்பெண்கள் மற்ற மாணவர்களுக்கு கூட தெரியாது..... மாணவனின் மதிப்பெண் என்பது அந்தந்த பேராசிரியருக்கும் சம்பந்தப்பட்ட மாணவருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் ..மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் வேறு பல அளவீடுகளை வைத்துள்ளார்கள் ...அதுவும் வாந்தி பண்ணி கக்குவது (plagiarism) முன்னேறிய நாடுகளின் பல்கலைகழகங்களில் மிகப் பெரிய குற்றம் .... ஆனால் இந்தியாவில் உள்ள பார்ப்பனிய வெறியர்களுக்கு அது தான் தேசிய சின்னம்.... அதுவும் இவனுங்க ரொம்ப பாடுபட்டு படித்து அதை கக்குவது கிடையாது தேர்வு கேள்விதாள்களையும் தேர்வுக்கு வரும் என கூறப்படும் கேள்விகளையும் தங்களுக்குள்ள அதிகார பின்புலத்தின் மூலமும், பண பலத்தின் மூலமும் அடைந்து பின்பு அந்த கேள்விகளுக்கான விடைகளை தேர்வுகளில் வாந்தி பண்ணி கக்குவது தான்.

சமீபத்தில் இந்திய ரயில்வேயில் வேலையாட்களை தேர்வு செய்வதற்கான தேர்வின் வினாதாள்கள் சந்தையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்க்கு விற்கப்பட்டது..... அதை செய்தது எசு.எம்.சர்மா என்ற பார்பனனும் அவனது மகனும், அதேபோல் கேத்தன் தேசாய் என்னும் பார்ப்பனியன் தான் இந்தியா முழுக்க மருத்துவ கல்விக்கான இடங்களை கூறு போட்டு விற்றான் ....... அவனுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனிய வெறியர்கள் தான் .... பார்ப்பனிய வெறியர்கள் கல்விக்கான இடங்களை பணத்தை கொண்டு வாங்குவது மட்டும் திறமையான மற்றொரு திறமையான மாணவனின் கனவுகளை அழித்து விடாதா...... இட ஒதுக்கீடு தான் அழிக்குமா...... என்னவொரு திருட்டு தனம்.....

அதற்கப்புறம் அமிதாப் என்றதொரு அரை வேக்காடு இட ஒதுக்கீட்டால் திறமையான மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்றளவில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்து இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பையும் காட்டி இருக்கிறான். இவனுடைய லட்சணம் என்னவென்றால் உத்திரபிரதேசத்திலும் மகராட்டிராவிலும் விவசாயிகளுடைய நிலத்தை முறைகேடாக வாங்கி மாட்டி கொண்டவன். அது சரி...... இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது என்று படத்தில் சொல்லும் இவன் திருப்பதி கோவிலுக்கு போகும்போது மட்டும் சிறப்பு விருந்தினர் என்ற அயோக்கியத்தனத்தின் பெயரில் புறவாசல் வழியாக தரிசனம் செய்து விட்டு வருகிறானே.... அங்கே அது தங்களுடைய திறமையால் (நாசமா போவதற்கு) .... இவனை போன்ற புறம்போக்குகள் வருவதற்கு பலமணி நேரங்களுக்கு முன்பே காத்திருந்து வரிசையில் இடம் பிடித்தாலும் கூட...... இவனுக தரிசனம் செய்து விட்டு போன பின்பும் அந்த சாமனியர்கள் வரிசையில் காத்து கொண்டிருப்பது அவர்களுடைய இடம் பிடிக்கும் திறமையை அவமதிப்பது என்று இந்த அரைவேக்காட்டுக்கு தெரியாதா.

கோவிலில் மணியாட்டும் உரிமையை ஒரு கும்பலுக்கு மட்டும் பட்டா போட்டு கொடுத்திருப்பது... அந்த மணியாட்டும் தொழிலுக்காக எல்லாவற்றையும் கற்று தேர்ந்த பிறகும் சாதியின் பெயரால் ஒருவனுக்கு அந்த உரிமை மறுக்கபடுகிறதே அது அவனின் திறமையை அவமதிப்பதாகாதா..... கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டின் பலன் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையாத காலத்தில் திருட்டு தனமாக back logs என்ற போர்வையில் அந்த இடங்களை அனுபவிக்கும்போது இந்த பார்ப்பனிய வெறியர்கள் சும்மா இருந்து விட்டு இப்போது இட ஒதுக்கீட்டின் பலன்களை சாதி ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் நுகர ஆரம்பிக்கும் நேரத்தில் ஐயோ திறமை வீணாய் போகிறதே என்றும் அலறும் ஓநாய்களின் செயல்களில் சில உள் அர்த்தங்கள் இருக்கவே செய்கிறது.....

ஐம்பது வருடங்களின் இட ஒதுக்கீட்டின் பயனால் தங்களையே எதிர்க்க துணிந்தவர்களை இப்படியே விட்டு வைத்தால் நமக்கு இணையாக எல்லா மட்டங்களிலும் வளர்ந்து விடுவார்களா என்று எண்ணும் ஆதிக்க வெறியர்களின் பயம் தான் அது. தங்களுக்கு ஏற்ப அரசு இயந்திரங்களும் அதிகாரமும் வளைந்து நெளிந்து இயங்கியது வரை அதை குறுக்கு வழியில் அனுபவித்த இந்த குள்ள நரிகள் இப்போது திறமையை பற்றி பேசுகின்றன..... இட ஒதுக்கீட்டை பற்றிய தெளிவை சாதிய ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் தெரியாது இருந்த வரை மருத்துவ, பொறியியல் மற்றும் இன்னபிற கல்விக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது கல்வியின் தரத்தை குறைக்கும் என்று குதித்த பார்ப்பனிய வெறியர்கள்..... அந்த சமூகங்கள் இட ஒதுக்கீட்டால் தாங்கள் பெற போகும் முன்னேற்றங்களையும் சம உரிமைகளையும் அறிய ஆரம்பித்த பின்பு, பார்ப்பனிய சாதி வெறியர்கள் தங்களுடைய அதிகார பின்புலத்தால் உயர்கல்வியை தனியார் மயமாக்கி தங்களுடைய இருப்பு பாதிக்கபடாதவாறு பார்த்து கொண்டார்கள்... இப்போது அரசு கல்வி நிறுவனங்களை தனியார் கல்வி நிறுவன முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருப்பதும் இந்த பார்ப்பனிய கும்பல் தான்..... இப்போது அவர்களுடைய ஒரே கவலை இவ்வளவு நாளும் தாங்கள் ஏகபோக உரிமை கொண்டாடிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் நிறுவனங்களிலும் தங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டின் துணையோடு பங்கு கேட்க வந்து விட்டார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த இட ஒதுக்கீட்டிற்கெதிரான ஊளைகளுக்கு காரணம்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி கொண்டிருக்கும்போதே அந்தந்த கல்வி நிறுவனங்களில் அவனுகளுடைய இருப்பு பாதிக்கப்படாதவாறு இருக்க உயர்கல்விக்கான இடங்களையும் அதிகரிப்பதும்..... புதிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களை தொடங்குவது என்பது போன்ற வேலைகளை தங்களுடைய அதிகார பலத்தோடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இதே பார்ப்பனிய வெறியர்கள் தான் முன்பு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களில் படிப்பிற்க்கான இருக்கைகளை உயர்த்துவதை..... அது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று கடுமையாக எதிர்த்தவர்கள்.... இன்று அதே உயர் படிப்புகளில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று போராடுவதும் அதே பார்ப்பனிய வெறியர்கள் தான். இட ஒதுக்கீட்டை இவ்வளவு பலமாக எதிர்க்கும் வெறியர்கள் தான் கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பல தில்லு முல்லுகளை பண்ணி அண்ணா பல்கலைகழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் புறவழியாக நுழைந்தவர்கள்..... அதுவும் கொடுமை என்னன்னா வளைமட்டை (Hockey), கபாடி, தடகளம் போன்ற விளையாட்டுகளில் தங்களுடைய கடின உழைப்பால் தேசிய அளவில் விளையாடிய ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வீரர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, போலி விளையாட்டு சான்றிதழ்களையோ, இல்லை யாருக்குமே தெரியாத விளையாட்டுகளின் சான்றிதழ்களையோ காட்டி இடம்பிடித்த பார்ப்பனிய புறம்போக்குகள் ஏராளம் உண்டு. அவனுங்களுக்கு தோதுபடுகிற சமயமெல்லாம் திறமையை தூக்கி குப்பை தொட்டியில் வீசுவதும், தோதுபடலைன்னா திறமை கேவலப்படுத்தப்படுகிறது என்று முனகுவதிலும் பார்ப்பனிய வெறியர்களுக்கு இணை அவர்களே தான்.

அதே போல இந்தியாவுக்கு பிறநாடுகளுக்கும் இடையிலான மனிதவள ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களிலும், மனிதவள மேம்பாட்டு துறைகளிலும் இந்தியாவுக்கு என்று ஒதுக்கப்படும் இருக்கைகளையும் இந்த பார்ப்பனிய கும்பல் திட்டமிட்டு அபகரித்து விடுவது நாம் யாருக்கும் தெரியாத அவர்களுடைய மிகப்பெரிய மோசடிதனம்.... அப்போதெல்லாம் அங்கு திறமை குப்பை தொட்டியில் வீசப்படும்.... நம்மவர்களுக்கு உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிய பிரதிநித்துவத்தை பற்றிய அறிவே சரிவர இல்லாமல் இருக்குபோது, அதை பற்றி கவலைபடுவதற்கு எங்கே நேரம் இருக்கும்.

ரெண்டாம் உலகப்போரில் யூத மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு விலையாக இன்றைய செருமானிய சமூகம் அவர்களுக்கு எதிராக யூதர்களால் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கும் பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளதோடு அதற்கு விலையாக யூதர்களுக்கு இன்றளவும் இழப்பீட்டை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்... ஆனால் சாதியின் பெயரால் பல நூற்றாண்டுகளாக சக மனிதர்களுக்கு எதிராக வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பார்ப்பனிய வெறியர்களுக்கு எதிராக ஏன் அவ்வாறு எந்த வழக்குகளும் தொடுக்கப்படவில்லை என்பது உலகப் பெரும் புதிர்களில் ஓன்று தான். தங்களுடைய முன்னோர்கள் செய்த தவறுக்கு இன்றைய தலைமுறைய சேர்ந்த செருமானியர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

இந்தியாவில் முந்தைய தலைமுறையை சேர்ந்த பார்ப்பனிய வெறியர்கள் சாதியின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு இன்றைய தலைமுறையினர் சிறு வருத்தத்தை கூட தெரிவிக்காமல்..... ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தடை செய்ய துடிக்கும் அவர்களது ஓலங்களில் இருந்து எந்த அளவிற்கு அவர்கள் நவீன சாதி வெறியர்களாக வார்த்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறியலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு இவ்வளவு காலம் அவர்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீள இட ஒதுக்கீடு ஒரு கருவியாக இருக்கும் போது அதையும் கொடுக்க கூடாது என்று சொல்லும் இளைய தலைமுறையை சேர்ந்த பார்பனிய வெறியர்களின் வன்மம் அவர்களது முந்தைய தலைமுறையினரை விட எந்த அளவிலும் குறையவில்லை என்பதற்கு இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஏதிரான திரைப்படங்களும், போராட்டங்களும் சாட்சியாக நிற்கின்றன.......

இவ்வளவு நாட்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை எந்தெந்த வழிகளில் எல்லாம் தடுக்க முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் தடுத்து விட்டு ..இப்போது இட ஒதுக்கீட்டின் மூலம் தாங்கள் இழந்த உரிமைகளை சட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடைகிற போது, தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதாக குரலெழுப்பும் இந்த சாதி வெறி பிடித்த குள்ள நரிகளின் ஆதிக்கம் பேசும் குரல் வளைகள் நெறிக்கப்படவேண்டும்




Saturday, August 13, 2011

சாதி வெறியை தூண்டி விடுவது யார் ?

சமீபகாலமாக என்னவோ தெரியலை பார்ப்பனிய வெறியர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்று விளக்க ஆரம்பித்தால் ...... ஒரு கூட்டம் ரவுண்டு கட்டி கொண்டு வந்து.... பார்ப்பன்களா தலையை வெட்டினார்கள், காலை வெட்டினார்கள் ...அவங்க எல்லாம் அடங்கி ரொம்ப காலமாச்சி அவிங்க எல்லாம் பிள்ளை பூச்சிங்க ....கரப்பான் பூச்சியை பார்த்தால் கூட பயந்து ஓடி விடுபவர்கள் அவர்களா..... சாதிய வன்முறைகளுக்கு காரணம் என்று மூச்சு விடாமல் பேசி கொண்டிருப்பார்கள் ...... அப்பாவி பார்பான்களை இவ்வாறு பேசுகிறீர்களே. அவிங்களை உங்களால் இப்படி பேசமுடியுமா... இவிங்களை உங்களால் நொட்ட முடியுமா என்று சவால் விடுவதும் கூட நடக்கும் ...ஆனால் அந்த அவிங்களையும் இவிங்களையும் தங்களுக்கு ஏவலாட்களாக தங்களது பிடியில் வைத்து கொண்டு தூண்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் என்று கூறினால் உடனே அவிங்க பீயை தின்ன சொன்னா இவிங்களும் அவிங்களும் தின்று விடுவார்களா என்றதொரு கேள்வியையும் எழுப்ப கூடவே வைத்திருப்பார்கள்
.....யப்பா ராசா... மடத்திற்கு வரும் பெண்களை மடக்கி காம கூத்தாடும் குருக்களின் பீயை வாழை இலையில் அள்ளுவதற்கு போட்டி போடுபவன்கள் பீயை திங்க சொன்னால் திங்காமலா இருப்பார்கள்....என்று பதிலளித்தால் உடனே பெரியார் அம்மணமா நின்னார், பெரியார் ஒரு சின்ன பொண்ணை திருமணம் செய்து கொண்டார் , முசுலிம்களுக்கு எதிரி, ஒடுக்கப்பட்டவர்களின் துரோகி , இந்துக்களை விமர்சிப்பது போல் கிருத்துவர்களையும், முசுலிம்களையும் விமர்சிக்கும் தைரியம் உண்டா, என்று நாம எதை பற்றி பேச ஆரம்பித்தாமோ அதை பற்றி பேசாமல் அப்படியே பாதையை திருப்பி விடுவார்கள்.....

சமீபகாலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களிடம் நீங்க ஆள பிறந்தவங்க, தாழ்ந்த சாதிகாரனுங்க உங்களுக்கு அடிமையாக சேவகம் செய்ய பிறந்தவனுங்க..அவனுங்களை நீங்க அடக்கி வைத்திருந்தால் தான் அது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று ஆதிக்க வெறிக்கு எண்ணெய் விட்டு கொண்டே அப்படியே ஒடுக்கப்பட்டவர்களிடம் போய் உங்களுக்கு அவன் தான் எதிரி என்று வன்மத்தை வளர்க்கும் பார்ப்பனிய சாதி வெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் தமிழ்நாடு மற்றுமொரு மத்திய ஆப்பிரிக்காவாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது
பார்ப்பனியா வெறியர்கள் எவ்வாறு சாதி வெறியர்களை உருவாக்குகிறார்கள் என்பதை பற்றி நான் எதையும் பேசுவதை விட சாதி வெறியர்களை எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு பார்ப்பான் மற்றும் சாதி வெறியனிடையே நடக்கும் உரையாடல்களின் படங்களை தருகிறேன்.படத்தை பார்க்க படத்தின் மீது வைத்து சொடுக்கவும் ...அதை பார்த்து உங்கள் தீர்ப்பை சொல்லுங்கள்

From 15 September 2011


From 15 September 2011


உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”....... (அவனவன் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி , மரபணு ஆராய்ச்சி என பல பல ஆராய்ச்சி பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத விடயங்களை இவிங்க G-Talk மூலம் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிட்டாங்க பாருங்க . அடேங்கப்பா என்ன வொரு திறமை .இவிங்க எல்லாம் நாசாவுக்காக வேலை செய்ய வேண்டியவிங்க .ஆனா என்ன பண்ண நாசமா போன இணையத்துல இவிங்க அறிவு விரயமாக்கபடுகிறது )..... என்கிற அளவில் சுய இன்பத்தில் லயித்து போக ... சாதி வெறி என்னும் போதையை அந்த கோமாளிகளுக்கு ஏற்றி விட்டு கொண்டு அலைகிறார்கள் இந்த பார்ப்பனிய வெறியர்கள் ....
பார்ப்பனிய சூழ்ச்சியால் பல்வேறு சாதிகளாக பிளவுபட்டு கிடக்கும் சகோதரர்கள் சிந்திப்பார்களா.. சாதியின் பெயரால் சக மனிதனை அடக்க நினைக்கும் மிருகங்கள் ஒடுக்கப்பட்டவர்களும் நம்முடைய சகோதர்கள் தான் என்று உணருவார்களா .... தாங்கள் ஆள பிறந்தவர்கள் என ஊளையிட்டு கொண்டு அலைபவர்கள், “ஒடுக்கப்பட்ட சகோதர்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை அளிக்கும் ஆதிக்க சமூகத்தில் பிறந்தற்க்காக வெட்கப்படுகிறேன்” என்று சொன்ன சமூக போராளி அய்யா தினகரன் போல் ஒரு நாளாவது தங்களுடைய செயல்களை எண்ணி நாணுவார்களா ..... இல்லை குடுமிகள் வெளி தள்ளும் மலத்தை சுமப்பதே வாழ்வின் பாக்கியம் என்று இருந்து விடுவார்காளா........
ஆனால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. சாதி மறந்து மனிதர்களாக ஓன்று பட ஆரம்பித்து விட்டால் எங்கே தங்களுடைய பொழைப்பு கெட்டு விடுமோ என்ற தாக்கத்தை, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகளின் போராட்டம் , பார்ப்பனிய வெறியர்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது

Wednesday, August 10, 2011

பெரியார் ஒரு குறுப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானவரா ????????

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தோழர் ஒருவர் முன்பொரு முறை ஈ.வே.ரா. “துணி விலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான்” என்று கூறினார் என்றொரு பதிவு ஒன்றை போட்டு பெரியாரை ஒரு குறுப்பிட்ட மக்களிடம் இருந்து அன்னியபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் சொல்வது படியே அப்படியே பெரியார் சொன்னாரென்றே வைத்து கொள்வோம் ....அதை கூட உங்களோட கூற்றின் படி ஒருமுறை தானே சொன்னார்...ஒரே வார்த்தையை மறுபடியும் மறுபடியும் கூறினால் அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளலாம்.. அவர் அப்படி திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை கூறியதாக வரலாற்று பதிவுகளில் உள்ளதா என்ன? .... அப்படி இல்லையே... அவர் அப்படி கூறிய போது என்ன சூழ்நிலையில் அவ்வாறு கூறினார் என்றும் தெரிந்து கொள்வது உண்மையை என்ன என்று அறியும் வாய்ப்பை எல்லாருக்கும் ஏற்படுத்துமல்லவா... பெரியாரை மடக்குவதற்காக பார்ப்பனிய வெறியர்கள் கேட்ட கேள்விக்கு நக்கலாக கூறிய பதிலா என்று யோசிக்க வேண்டியதும் நமது கடமை.... அதை தான் பெரியார் மக்களிடம் ஒவ்வொரு முறையும் பேசும் போது வலியுறுத்துவார். அதாவது அவருடைய கருத்துகளை அப்படியே கண்மூடி தனமாக பின்பற்றாமல் அவற்றை ஒவ்வொருவரும் அவரவருடைய சுய புத்தியை கொண்டு ஆய்ந்து நடக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துவார் .

எந்த மனிதனையும், அவர்களுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் அவை மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பவையா இல்லை கெடு விளைவிப்பவையா என்று பகுத்தாய்ந்து அதை பின்பற்றுவதையும் அவரவருடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்தவதையும் செய்ய வேண்டும். எதையும் கண்மூடி தனமாக பின்பற்றும் மனிதர்களை தன் வாழ்நாளில் கடினமாக சாடியவர். அவ்வாறு இருக்க பெரியார் எந்த சூழ்நிலையில் அதை கூறினார், அதை காழ்புனர்ச்சியோடு கூறினாரா இல்லை அவருடைய சமூக விடுதலை போராட்டத்தில் குற்றம் கண்டு பிடிக்க முயன்ற அரைமண்டையங்களுக்கு நக்கலாக அளித்த பதிலா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் பல நேரங்களில் நாம் கூட நம்மிடம் யாரவது நாம் செய்யாத விடயத்தை "நீ பண்ணினாயா?" என்று திரும்ப திரும்ப கேட்டால் ஒரு கட்டத்தில் எரிச்சலில் நாமே "ஆமாம்யா நான் தான் அதை பண்ணினேன் அதற்கு இப்ப என்ன பண்ண போற?" என்று திரும்ப கேட்பது உண்டு. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அப்போது பத்திரிகை துறையில் தங்களோட ஆதிக்கத்தை வைத்திருந்த குடுமிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த பல வகைகளிலும் முயன்றனர். அம்பேத்கருக்கு எதிராகவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பல தலைவர்களையும் கொம்பு சீவி விட்டவர்கள் தான் பார்ப்பன வெறியர்கள்

அவனுங்க திருமணமாகாத இளம்பெண்களோடும், அடுத்தவர்களுடைய மனைவியரோடும் பாலியல் பரிசோதனை செய்து கொண்ட ஒருத்தனையே நாட்டின் மகாத்மாவாக்கியவர்கள் அல்லவா .....இன்றைக்கு கூட இடைப்பட்ட சாதியினரின் சாதி பெயர்களை அவர்கள் மறந்து கொண்டிருக்கும் காலத்திலும் தேவர்வால், நாடார்வால், முதலியார்வால் என்று அழைத்து நீ இன்னான் என்று ஞாபகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சாதி வெறியை ஊட்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் .. பெரியார் அப்படி காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய உள் அர்த்தத்தோடு கூறியிருந்தால் கட்டாயம் அண்ணல் அம்பேத்கர் பெரியாரை கடுமையாக சாடி இருப்பார் . இன்னொன்றும் கூறுகிறேன் பெரியார் அதை கூறினார் இதை கூறினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒன்றை கூறி கொல்ல முனைகிறேன் ... அப்போதிருந்த கால கட்டத்தில் தங்களை பறையர் இன தலைவர்களாக காட்டி கொண்டவர்கள்......தங்களது சுயநலத்துக்காக கொள்கையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும் அடகு வைத்த அவர்கள் காலபோக்கில் காணாமல் போய்விட்டார்கள் என்பது வேறு விடயம் ..... அவர்களுக்கு கீழ் என்று கருதப்படும் சாதிகளை எவ்வாறெல்லாம் கேவலமாக பேசினார்கள் என்றும் வரலாற்று பதிவுகளில் இருக்கிறது ......பதிலுக்கு பதில் என்று அணைந்து போன முரண்பாடுகளை தூண்டி விடுவது ஓன்று கூடி உரிமையை மீட்டெடுக்க துடிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கிடையே பிளவை ஏற்படுத்த வழி வகுத்து விடும் ...ஏனென்றால் இந்துத்துவ பார்பனிய சாதி வெறியர்கள் அதை தான் எதிர் பார்க்கிறார்கள்..... அதனால் தான் இணையங்களிலும் ஊடகங்களிலும் பெரியார் ஒரு குறுப்பிட்ட சாதியினருக்கு எதிரானவர் என்ற பரப்புரையை மும்முரமாக செய்கின்றனர் ....

அந்த பார்ப்பனவெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும் அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பிராமண , நாயர், வெள்ளாள சாதியை சேர்ந்த ஆண்கள் வரும் போது அவர்களுக்கு சேலையை விலக்கி தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் கொடுமையை அரங்கேற்றினார்கள் . ஒரு முறை மார்புசட்டையை அணிந்ததற்காக சாணார்கள் என்றழைக்கப்பட்டு சமூகத்தில் மோசமாக நடத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த கொடுமைகளை பற்றிய செய்திகளை தங்களுக்கு வசதியாக இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இப்போதெல்லாம் பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களோடு நேரடியாக மோதுவதை விட்டு விட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி விட்டு அவர்களுக்கிடையே அடித்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே செயல் படுகிறார்கள்.....

அதன் எதிரொலி தான் அரை மண்டையனுங்க பார்ப்பனியத்தின் கொடுமைகளை பற்றி பேசினால் “பார்ப்பான் தான் இழிச்சயவாயனா” ..”எந்த பார்ப்பான் ஒடுக்கப்பட்டவர்கள் அடிக்கிறான் அவன் தான் அடிக்கிறான் இவண் தான் அடிக்கிறான் உங்க பலத்தை அவனிடம் காட்டுங்க” என்று கொம்பு சீவி விட்டு விட்டு...... அந்த பக்கம் ஒடுக்குகிற சாதி வெறியர்களிடம் போய் நீங்க தான் சத்திரியர்கள், நீங்க தான் சூரர்கள், நீங்க தான் இந்து மதத்தின் தூண்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றிய நம்ம அய்யா தான் இந்தியாவின் ஒரே தெய்வ திருமகன் என்று சால்ரா அடித்து அவனுங்களையும் கொம்பு சீவி விடுவானுங்க....... பின்பு ரெண்டு பெரும் அடிபோட ஆரம்பிச்சிட்டானுங்கன்னா அதை சுட்டி காட்டி நாங்களா ஒடுக்கப்பட்டவர்களை அடிக்கிறோம் பாருங்க அவனுங்க தான் அடிக்கிறாங்க என்று பரப்புரை பண்ண ஆரம்பிப்பது...... ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பிச்சா அவர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவது என்று அவனுன்களோட வழக்கமான வேலையை செய்தது கொண்டு தான் இருக்கிறார்கள்..... ஆனால் ஒரு சில ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் குடுமிகளோட சூழ்ச்சிக்கு இரையாகி போய் விடுவது தான் வேதனைக்குரிய விடயம். அப்படி வெகு லெகுவாக இரையாகி போய்விடுவதானால் தானோ என்னவோ “சோ“ போன்ற பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கும்போது வெளிப்படையாகவே தங்களுக்கிடையே கிண்டலடித்து மகிழ்ந்தார்கள் ......

Thursday, June 9, 2011

அம்மாவின் சட்டமன்ற தீர்மானமும் தமிழ் ஈழத்திற்க்கெதிரான உட்குத்து அரசியலும்


சட்டமன்றத்தில் அம்மா , மகிந்தரின் இலங்கைக்கெதிரான சர்வேதச பொருளாதார தடைக்கு ஆதரவாக ஹிந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்க செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானபோது ஏதோ ஈழமே கிடைத்து விட்டதென்றெண்ணி அகமகிழ்ந்து கொண்டிருக்கையில் , அம்மா அப்படி என்ன தான் தீர்மானத்தை பற்றி பேசி இருக்கிறார் என்ற ஆவலும் மனதில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செயலலிதா என்றாலே ஈழத்திற்க்கு எதிரானவர் என்ற எண்ணம் என் மனதில் ஆழ வேர் ஊன்றி பல காலங்களாகி விட்டது என்பது வேறு விடயம். இந்நிலையில் செயலலிதாவின் தீர்மானத்தை ஒட்டிய உரையை படிக்க தொடங்கியபோது தான் அம்மாவின் ஈழத்திர்க்கெதிரான உட்குத்து அரசியலின் வீரியத்தை உணர ஆரம்பித்தேன். ஆக அம்மா இன்னும் மாறவில்லை ...மாறிவிட்டார் என்று சொல்வதெல்லாம் சும்மா. அப்படி என்ன தான் கூறி விட்டார் என்று நண்பர்கள் கேட்கலாம் ....அங்க தான் வருகிறேன் ஈழ விடுதலைக்கான போராட்டத்தையே தீவிரவாதம் என்று தானே தனது பேச்சை ஆரம்பித்து இருக்கிறார் நம்ம அம்மா.

அதோடு நின்று விடாமல் அப்போராட்டம் இந்திய இறையாண்மைக்கும் (இந்திய இறையாண்மைன்னா என்னவென்று எனக்கு தெரியாது யாராவது விளக்கவும்), பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டம் என்றல்லவா சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி இருக்கிறார். அம்மையாருக்கு நன்றாகவே தெரியும்..சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மதித்து ஹிந்திய அரசாங்கம் ஒன்னும் புடுங்க போவதில்லை என்று. பின்பு எதற்க்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று உற்று பார்த்தால் அது ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை குற்றவாளியாக்கிவிட்டு அம்மையார் தன்னை ஈழமக்களின் தாயாக சித்தரிக்க முயலும் நாடகத்தின் அடுத்த கட்டமே இது.

ஒருபக்கம் சோனியாவின் பக்கத்தில் இருந்து கருணாநிதியை விரட்டிவிட்டு அவருடைய இடத்தில் சோனியாவின் சகோதரியாக தனது இருப்பை நிலை நிறுத்தி கொள்ள முயலும் அதே வேளையில் தமிழகத்தில் ஈழ தமிழர் தாய் வேடத்தையும் ஏற்று தன்னை ஆஸ்கர் விருதுக்கு தகுதிவாய்ந்த நடிகையாக தயார் படுத்தி கொள்ள முயலுகிறார் . இது தெரியாமல் இங்க ஒரு கோஷ்டியினர் அம்மையார் ஏப்பம் விட்டால் கூட அது ஈழ தமிழர்களின் ஆதரவு குரல் என்று கூத்தாடுகிறது. வேற என்ன பண்ண முடியும் அவங்களால் ... ஏற்கனவே சிங்களத்தியை வைத்து படமெடுத்த அவங்க சிங்க தமிழ் தலைவனின் மீது பாலியல் வழக்கு அல்லவா பதிய பெற்று இருக்கிறது, இந்த நேரத்தில் அம்மையாரை பகைப்பது என்பது முட்ட குடித்து விட்டு சாக்கடையில் சென்று குப்புற படுத்து கொள்வது போன்றது என்பது அவங்களுக்கு தெரியாதா. இதை விட கொடுமை என்னன்னா கருணாநிதி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதால் அதை நம்பி அப்பாவி ஈழ தமிழர்கள் பதுங்கு குழியை விட்டு வெளியேறி இலங்கை ராணுவத்திடம் சிக்கி பலியானார்கள் என்று வேறு மத்தளம் வாசித்திருக்கிறார். ஏதோ ஈழத்தமிழர்கள் செயற்கை கோள் இணைப்பு கொண்ட போனோடு உலவியது மாதிரி அல்லவா பேசி இருக்கிறார் . இதற்கும் ஒரு கூட்டம் ஆமாம் சாமி போட்டு கொண்டுகொண்டு இருக்கிறது தான் கொடுமை . விடுதலை புலிகள் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களே வெளியுலகு தொடர்பு சரியாக கிடைக்காமல் இக்கட்டான நிலையில் இருந்த காலம் அது. அம்மையார் என்னடான்னா போர் முனையில் இருந்த அப்பாவி ஈழ தமிழர்கள் கருணாநிதி பேச்சை கேட்டு தான் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்ததாக உளறி கொட்டி கொண்டு இருக்கிறார். என்னதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் வரிக்கு வரி ஈழ தமிழர் போராட்டத்தை தீவிரவாதம் என்றும் விடுதலை புலிகள் அமைப்பு இந்திய விரையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என்று சந்தடி சாக்கில் தன்னுடைய ஹிந்திய தேசிய பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக மொத்தம் இந்த தீர்மானத்தின் மூலம் சோனியாவிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது புரியாமல் ஒரு கூட்டம் தண்ணி அடித்த மப்பில் கூவுவது போல் அம்மாவுக்கு அதரவாக பஜனை மடத்தில் ஊளை இட்டு கொண்டு இருக்கிறது.

சோனியாவை திருப்தி படுத்த விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் கைது, போதை மருந்து கடத்திய ஈழ தமிழர் கைது போன்ற செய்திகளை ஊடகங்களில் இனிமேல் அடிக்கடி காணலாம் .

இங்கே என்னடான்னா ஈழ ஆதரவு சக்திகள் ஒரு முனையில் திரளுவதை பற்றி எண்ணாமல் அவனவன் தனி ஆவர்த்தனம் நடத்தி கொண்டு இருக்கிறான்கள் . இப்படி ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களிடையே நடந்த சகோதர யுத்தத்தின் விளைவு தான் இன்றைய அவர்களின் நிலைமைக்கு காரணம் .




ஆக மொத்தத்தில் பாப்பான்கள் அவனுங்க வேலையை திட்டமிட்டு அழகாக செய்து கொண்டு இருக்கானுங்க. பாப்பானுங்களுடைய திட்டங்களுக்கு கருணாநிதி போன்ற சுயநலமிகளின் செயல்கள் காரண காரியங்களாகி போய்விட்டது .

பெரிய கொடுமை என்னன்னா நாம் தமிழர் என்று கூறி கொண்டு அலையும் ஒரு கூட்டம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளறி கொட்டி கொண்டு இருக்கிறது .அவனுங்களுக்கு எங்கே தெரிய போகிறது திராவிடத்தால் நாம் வீழவில்லை... மாறாக அய்யா பெரியாரின் சமூக விடுதலை போராட்டங்களின் விளைவாக நன்மைகளை பெற்ற பிறகு ஆரியங்களுடைய காலை நக்கி பிழைக்க துடிக்கும் திராவிடர்களால் வீழ்ந்தோம் என்று . அவங்களுக்கு தான் நடிகைகளின் பஞ்சாயத்தை தீர்ப்பதிலேயே பாதி நாள் கழிந்து விடுகிறது . கேட்டால் மலையாளி எதிரி, கன்னடன் துரோகி, தெலுங்கன் பகையாளி என்கிறான் . ஆனா இவனுங்களுக்கு மேல கூறிய மாநிலங்களின் அரசியல் அதிகார குடுமி பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது என்பதை புரிந்து கொள்ள தெரியவில்லையா இல்லையென்றால் புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறான்களா. நம்பியார், நாயர் நம்பூதிரிகளின் தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை ஏதோ எல்லா மலையாளிகளும் தமிழ் இன விரோதிகள் என்று கூவுவது. ஆனா தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறி கொண்டு சக தமிழனின் மீது சாதியின் பெயரால் வன்முறையை திணித்த, பாப்பான்களுக்கு காவடி எடுத்தவனின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை என அமர்க்களப்படுத்தி கொண்டு இருக்கிறது. மலையாளிகளிடம் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்கு கேரளா பார்ப்பனியவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பரப்புரையின் விளைவு என்பது என்று தான் புரிய போகிறதோ.

அம்மையாரின் ஹிந்திய தேசிய அரசியல் ஆட்டங்களுக்கும், விடுதலை புலிகளின் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவிகரமாக இருப்பது திரிவேதி, சதுர்வேதி, நாயர், நம்பியார், போன்ற பார்ப்பனிய வெறியங்கள் என்பது அம்மாவுக்காக காவடி தூக்கும் நடிகைகளின் காவலன் சீமானின் சில்லறை குஞ்சுகளுக்கு என்று தான் புரிய போகிறதோ. இதை எல்லாம் புரிந்து கொண்டதால் தான் எம் தலைவன் பிரபாகரன் தன்னை மறைத்து கொண்டு வாழ்கிறானோ என்னவோ.... அதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்