Friday, September 16, 2011

தமிழத்தின் பிரதான எதிர்க்கட்சி உடைக்கப்படுமா ? .... தற்போதைய காரமான கிசு கிசு பாட்டிலை உடைக்குமா பன்றி குட்டி

தேசியத்தையும் திராவிடத்தையும் முன்னுக்கு போக்குற கட்சி ...உடனே எந்த தேசியத்தை எந்த திராவிடத்தை என்று கேட்க பிடாது .... அது பற்றிய ரகசியங்கள் கட்சி ரெண்டா பிளந்த பிறகு தான் உலகுக்கு தெரிய வரும் ..... தற்போது நிறைய பேருக்கு கட்சியா பிளவா என்று குறுக்கும் நெடுக்கும் சந்தேகம் வந்திருக்குமே... அதை பற்றி எனக்கு தெரிந்த நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கசியும் சேதியை தான் கக்க போகிறேன்.... அதுக்கு முன்னால் குடிகார காந்தம் எப்படி எதிர்கட்சி தலைவர் ஆனார் என்பதையும் பார்ப்போம். குடிகார கந்தம் அவரோட சொந்த உழைப்பில் ஒன்னும் அரசியலில் முன்னுக்கு வந்து விடவில்லை..... அவரோட நாயுடு சாதி பெருந்தலைகள் பண்ணிய திருவிளையாடல்களின் பலன் தானாம் அது. ஆரம்பத்தில் அண்ணன் கண்ணீர் குட்டை மீது தான் முதலீடு பண்ணி இருந்தார்களாம். அண்ணன் தாய் கழகத்தில் இருந்து வெளியே வர அண்ணனுக்கு போதை ஏற்றி விட்டதும் அந்த சாதி பெருந்தலைகள் தானாம்.

அண்ணனுக்கு அப்போது இளைஞகர்களிடையே இருந்த மவுசை வைத்து எப்படியாவது கல்லா கட்டி விட வேண்டும் என்று துடித்த சாதி பெருந்தலைகள் பொருளாதார உதவிகளை வாரி இறைத்ததோடு மட்டுமல்லாமல் சாதி சங்கங்கள் மூலமாக அவங்க சாதி ஓட்டுகளையும் முழுமையாக அண்ணனுக்கு திருப்பி விட எல்லா வேலைகளையும் செய்தார்களாம். ஆனால் அண்ணன் அடிக்கடி உணர்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகளால் அண்ணன் கண்ணீர் குட்டையின் அரசியல் வாழ்வு ஆட்டம் காண, சாதி பெருந்தலைகள் உழைப்பும் நாயுடு சாதி ஓட்டுகளும் வீணாகி போய்விட கூடாதே என்ற கவலையில் கண்ணீர் குட்டையை கைவிட்டு விட்டு புது ஆளை தேடி கொண்டிருந்த சமயத்தில் மாட்டியவர் தான் அப்போது கருப்பு புரட்சியாக பரிமாணம் எடுத்து கொண்டிருந்த குடிகார காந்தம். காந்தத்தின் செல்வாக்கை அரசியலில் மூலதனமாக்கி கல்லா கட்ட ஆசை பட்ட சாதி பெருந்தலைகள் குடிகாந்தத்துக்கு தங்களது ஆதரவை திருப்பி விட்டார்கள் அத்தோடு பெருளாதார உதவியையும் நாயுடு சாதி ஓட்டுகளையும் முழுவதுமாக பெற்று தர வாக்களிகப்பட்டதாம். ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசோடு குடிகார காந்தத்தின் கட்சி கூட்டணி வைக்க முழு ஏற்பாடும் காங்கிரசில் உள்ள நாயுடு லாபி மூலமாக நடந்ததாம். ஆனால் காங்கிரசில் அப்போது பலமாக இயங்கி வந்த ரெட்டி லாபி அதற்கு முழு ஆதரவை அளிக்கவில்லையாம். அதற்கு காரணம் குடிகார காந்தம் ஆந்திராவில் சந்திர பாப்பாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததை காங்கிரசில் இருந்த ரெட்டி லாபி விரும்பவில்லை.

இந்த சமயத்தில் தான் நாயுடு சாதி பெருந்தலைகள் பாஜகவில் மோடியோடு நெருக்கமாக இருந்த மற்றுமொரு நாயுடு மூலமாக தமிழகத்து அம்மையாருடன் கூட்டணி ஏற்பட வழி வகை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அம்மாவின் தோழி அதை ஏற்கவில்லை. தேசிய அளவில் பலமான அரசியல் பின்னணி கொண்ட சாதியை சேர்ந்த குடிகார காந்தம் வளர்வது தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று சின்னம்மாவின் சாதிக்காரர்கள் உடுக்கை அடித்தது தானாம். ஆனால் சின்னம்மாவை சமாதானப்படுத்தியது அம்மாவின் முதன்மை குருவான மொட்டை மண்டையனாம். அதாவது குடிகார காந்தத்தின் ஒட்டு வங்கி அம்மா கட்சி கரை ஏறுவதற்கு மிகவும் அவசியம் என்றும், ஆட்சியை பிடித்த பிறகு குடிகாரனை அடக்கி விடலாம் என்று ராச குரு கொடுத்த ஆலோசனைகளால் ஒருவாறு சமாதானம் அடைந்த சின்னம்மா அந்த கூட்டணிக்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, அவர்களே எதிர்பார்க்காத அபார வெற்றி பெற்ற பிறகு, குடிகாரன் அவர்களுக்கு பெரிதாக தேவை படவில்லை. அதோடு அம்மாவின் கவனம் இந்துத்துவ அரசியலில் திரும்ப..... குடிகார காந்தத்தை இனிமேல் வளரவிடுவது அவ்வளவு நல்லது கிடையாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக குடிகாந்தத்தின் டவுசரை எப்படி கழட்டலாம் என பல நாட்களாக நடந்த விவாதத்திற்கு பின் எழுந்த திட்டம் தான் இந்த கட்சி உடைப்பு வேலையாம். அதற்கு கருவியாக பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் குடிகார காந்தத்தின் கட்சி அவை தலைவரான பன்றிகுட்டி.

From 17 September 2011


பன்றி குட்டிக்கு சாதி உடுக்கை அடிக்க படுகிறதோடு மட்டுமல்லாமல் மருத்துவருக்கு பதிலாக பன்றி குட்டியை அவர் சார்ந்த சாதியின் ஒரே தமிழக அரசியல் பிரதிநிதியாக மாற்றுவதற்கு உதவிகளும் அதற்கான பொருளாதார தேவைகளும் அளிக்கப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஏற்கனவே மருத்துவரை அரசியலில் இருந்து ஒழித்து கட்டும் வன்மத்தோடு குடிகார காந்தத்திடம் கூட்டு சேர்ந்த பன்னி குட்டிக்கு இப்போது இது தான் சரியாக தோன்றுகிறதாம். அதனால் பன்றி குட்டியும் அதற்கு தோதாக கட்சியில் உள்ள சொந்த சாதியை சேர்ந்த எம்எல்ஏக்களை ரகசியமாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் .அதற்கு உளவுத்துறை முழு வீச்சில் உதவி செய்து வருகிறதாம்....... உடனே என்னங்க இது இப்படி துரோகம் செய்யலாமா என்று சிலர் கேட்கலாம். அட போங்க சார் .... ஒரிஜினலிடமே ஆட்டையை போட்ட பன்னி குட்டிக்கு டூப்ளிகெட்டேல்லாம் எம்மாத்திரம். ஆக பன்னி குட்டியை கொண்டு குடிகாரன் கையில் இருக்கும் பாட்டில் சீக்கிரத்தில் உடைக்கப்படுமாம். ஆனால் குடிகாரனோட நிலைமையை பார்க்க தான் பாவமா இருக்குது. யாரு கண்டா தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளரை தாக்கிய சம்பவம் தூசி தட்டப்பட்டு குடிகாரனுக்கு வேலூர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஒரிஜினலையே அரசியலில் ஓழித்து கட்ட இந்திரத்தின் மகனோடு திட்டமிட்ட அம்மா போலியை விட்டு வைப்பாரா என்ன.....

என்னதான் நடக்கணும் நடக்கட்டுமே......

Wednesday, September 14, 2011

ஆதிக்க அரிப்புக்கு சொறிந்து விடும் இணையத்தில் சுற்றி திரியும் மண்ணாங்கட்டிகளின் சொறியல்கள் – பாகம் – 1

நேற்றைய தினம் தங்களை ரெண்டு முறை பிறந்தவர்களாக கருதி கொள்ளும்..... உடனே அதென்னையா ரெண்டு முறை பிறந்தவங்க, ஒருதடவை வெளிய வருவதற்குள்ளே ஏக அக்க போர் பண்ணி விடுகிற மனித குழந்தை ரெண்டாவது முறை எங்க நுழைந்து வெளியில் வரும் என்றெல்லாம் கேட்க கூடாது...... சமூகத்தை சேர்ந்த அன்பர் ஒருவரோடு இணையத்தில் மாட்டி கொள்ள நேர்ந்து விட்டது. அவரது மண் (டை) சுரங்கத்தில் இருந்து வெளியே தள்ளிய கருத்து சொறியல்களையும், குப்புற படுத்த சமாளிப்புகளையும் அப்படியே இங்கே தந்துள்ளேன். அந்த அன்பரது கருத்துக்களை மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடித்து உள்ளேன் . படிக்கிறவங்க படித்து ரெண்டு முறை அவதாரம் எடுத்த சமூகத்தின் மண்டைக்குள்ள என்ன இருக்கும் என்று மறுபடியும் உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

From 15 September 2011


பொய்கள் எங்கிருந்து உருவாகிறது என்பதை வைர மூக்குத்தி வேணுமாடி கள்ளி என்று கதை சொல்லுற தோரணையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே அண்ணாத்தே நற்செயல்கள் பற்றி சான்றிதழ் கொடுக்கிறாராம் . ம்ம்ம்ம் கர்ப்ப கிரகத்தில் வைத்து கோவிலுக்குள் வர பொம்பளைகளிடம் இவங்க பண்ணுகிற நற்செயல்கள் நாடறிந்தது தானே .



From 15 September 2011


எதை பற்றி கேள்வி கேட்டாலும் உலகத்தையே சுற்றி வருவாங்களே ஒழிய கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க. சாதி வெறியனா இல்லையா என்ற கேள்விக்கு மானம் வீரம் பற்றி பாடம் எடுக்கிற அந்த ஸ்டைலை பார்த்தாலே அங்க இருக்குற அவ்வளவு பேரும் சுப்புரமனிய சாமியா தன் இருக்கானுக என்று தெரியுது. ஆனால் யாருக்கும் தெரியாமல் ஒருத்தனை மற்றொருவனுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதில் இவங்களை விட சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் எவரும் இருக்க முடியாது


From 15 September 2011


சாதி வெறியரா இல்லையா என்பதற்கு இனி தான் ஆராய்ச்சி பண்ணணுமாம். எங்க போய் ஆராய்ச்சி பண்ண போறாரோ. ஒரு வேளை நாசாவில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிடலாம் என்ற முடிவில் இருக்கிறாரோ என்னவோ. மூடத்தனத்தை பற்றி புராணம் என்ற பெயரில் கட்டுக்கதைகளை பரப்புவதையே தொழிலாக செய்யும் கும்பல் நமக்கு பாடம் எடுப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

From 15 September 2011





From 15 September 2011


புராணத்துக்கு என்னமா விளக்கம் குடுக்குறாங்கப்பா. அது அவங்க கையில கிடைத்த ஒரு சாதனமாம் அதில் தேவையானதை பிடித்து கொள்ளுவதும், எடுத்து அவங்க தேவைக்கு ஏற்ப ஆட்டி கொள்வதும் அவரவர் விருப்பமாம். அது என்ன சுவாரச்யமோ எல்லா புராணமும் நம்ம முப்பாட்டனுங்க அவங்க அப்பாக்களுக்கு தெரியாம ஒழித்து வைத்து படித்த சரோஜா தேவி புத்தகத்தில் வரும் கதைகளோட நகல்கள் போல் தான் தெரியுது. இவரு சொல்லுறதை பார்த்தா அந்த காலத்தில் எல்லாவனுங்களும் காம வெறியோடு சுத்தினாப்லலா இருக்குது.

Saturday, September 10, 2011

தோழி செங்கொடி அவசரப்பட்டு விட்டாளோ................

தலைப்பை படித்தவுடன் பலரது புருவங்கள் வியப்பிலோ இல்லை அதிர்ச்சியிலோ உயரலாம். ஆனால் இப்போது நடக்கிற கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது நான் வைத்த தலைப்பு சரி என்று தான் படுகிறது. மூவருடைய மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் பார்ப்பனிய இந்துத்துத்வ கூட்டமைப்பினால் ஆழ்கடலில் முங்கி கொண்டிருப்பவனின் ஈன முனகலாக போய் கொண்டிருந்த வேளையில், தத்தளித்து கொண்டிருந்த போராட்டத்திற்கு கலங்கரை விளக்கமாய் தன்னையே எரித்து கொண்டவள் தான் எம் தோழி செங்கொடி. போலியாக புனையப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்புவிக்க குற்றவாளி கூண்டில் திணிக்கப்பட்டு தான் தோன்றி தனமான தீர்ப்புகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகனுக்காக போராடி கொண்டிருந்த அற்புதம் அம்மாளை பார்க்கையில் இவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை நம் அனைவருடைய மனங்களில் கொழுந்து விட்டிருந்தால் அது இயல்பான ஒன்றே... அப்படி தோழி செங்கொடி மனதில் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு தான் கும்மிருட்டில் தள்ளாடி கொண்டிருந்த போராட்டத்திற்கு வெளிச்சத்தை காட்ட அவளுடைய உடலின் மீதே பற்றவும் என்று கூறினால் அது பொய்யாகாது. ஆனால் அதே அற்புதம் அம்மாள் எந்த மகனுக்காக போராடுகிறாரோ, அந்த மகனின் உயிரை பறிக்க முண்டி கொண்டு வேலை செய்யும் பார்ப்பனிய அம்புசத்திற்கு நன்றி சொல்ல முண்டி கொண்டு முன்வரிசையில் நிற்பதை பார்த்தபோது , அது சந்தர்ப்பவாதம் தோழி செங்கொடியின் தியாகத்தை பல்லை காட்டி பழிப்பு செய்தது போல் தான் தோன்றியது. எவ்வளவு தீர்க்கமாக போராடி கொண்டிருந்த அந்த அம்மாவை சந்தர்ப்பவாதம் என்னும் பேய் கட்டுபடுத்த ஆரம்பித்து விட்டதா இல்லை, இவ்வளவு நாளும் சந்தர்ப்பவாதியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தாரா என்ற கேள்விகளும் எழும்பாமல் இல்லை. இங்கு எந்த சூழலிலும் நான் மூவருக்குமான மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த போராட்டம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி மனதில் எழும்பி கொண்டிருக்கும் கேள்விகளை மறைக்கவும் எமக்கு தெரியவில்லை.

From Blogger Pictures


அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனின் மீது திணிக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தை எதற்கு தமிழர்களுக்கு மீது திணிக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம் என்று வடிவம் கொடுத்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக அப்பாவிகளின் மீது திணிக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்று அதனை அழைத்திருக்கலாமே. அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து போராட காட்டிய உத்வேகத்தை, காலம் காலமாய் இடத்திற்கு ஏற்றார் போல் இந்த்துத்வ, தமிழ் தேசியம் என்ற போர்வைகளை அணிந்து கொண்டு சமுதாயத்தின் கடைவிழும்பில் உள்ளவர்களை ஒடுக்கி சுய இன்பம் அனுபவித்து கொண்டு அலையும் ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில், தோழி செங்கொடி காட்டி இருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. அப்படி தானே எண்ண வைத்து விட்டார் அற்புதம் அம்மாள். சாதி வெறியனுக்கு மாலையிட்டு சுய இன்பம் கண்ட ஒருவனின் பின்னால் பலி ஆடு போல் சுற்றுகிறதை பார்க்கும் போது அப்படி தானே தோன்றுகிறது.

அற்புதம் அம்மாள் பார்ப்பனியத்தின் வாசலில் மண்டியிட்டு உயிர் பிட்சை கேட்கிறபோது, அதே பார்ப்பனியம் தமிழ் சமூகத்தோடு வைத்து கொண்ட கள்ள உறவில் பெற்றெடுத்த சாதியத்திற்கும் அதன் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தன்னை களபோராளியாக முன்னிறுத்தி கொண்ட தோழி செங்கொடியின் தியாகத்தின் முன்னால் அற்புதம் அம்மாள் மீது நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மண் சுவரை போல் உதிர்ந்து விழுவதை வேதனையோடு பார்த்து கொண்டிருக்க தான் ஒழிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. எப்படி தடுக்க முடியும், தன்னுடைய சுயலாபத்திற்காக, தமிழினத்தை காவு கொள்ள துடிக்கும் பார்ப்பனிய தேவதையின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நன்றி சொல்ல அலைந்து கொண்டிருக்கிற பெண் பித்தனான ஒரு தற்குறியின் பின்னால் சென்று தன்னுடைய மகனுடைய விடுதலையே ஈழ விடுதலை என்றளவில் லட்சக்கணக்கான ஈழ மக்களின் அவலத்தை ஒரு உயிருக்குள் சுருக்கி போட்ட ஒரு பெண்மணியை, சரித்திரத்தை புரட்டி போட வந்த பெண்மணியாக எண்ணியது அவசர குடுக்கைத்தனமோ என்று எமது மனசாட்சியே எம்மை கேலி செய்கிறது. அவருடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து தப்பிக்க வைக்க தன்னுடைய உயிரையே ஈகையாக தந்த ஒரு பெண் போராளியின் தியாகத்தை முன்னிறுத்தாமல், அப்போராளி மூட்டிய நெருப்பால் எழுந்த தீவிர எழுச்சிக்கு பயந்து நடுங்கி தனது உரைகளை சமயத்திற்கு ஏற்றார் போல் மாற்றி வாசிக்கிற பார்ப்பனிய நாடக நடிகை அரங்கேற்றிய நாடகத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கொடி அசைக்க ஓடி கொண்டிருக்க, அற்புதம் அம்மாவால் எப்படி முடிகிறது.

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தையும், இன விடுதலைக்கான போராட்டத்தையும் தனித்தனியே பார்க்கும், தமிழ் தேசியத்தை போர்த்தி கொண்டு அலைகிற போலி தமிழ் தேசிய வியாதிகளான சாதி வெறியர்கள் மூட்டி விட்ட நெருப்புக்கு செங்கொடி தேவையில்லாமல் தன்னை பலிகடாவாக்கி விட்டாளோ என்று தான் தோன்றுகிறது. சாதி வெறியர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான போரில், உயிர்வாழ்ந்து களமாடி இருந்தால் பார்ப்பனியத்தொடு கள்ள உறவு வைத்து கொண்டு அலைகிற அந்த வெறிநாய்களுக்கு தடுப்பூசியையாவது போட்டு இருக்கலாம். தோழி நீ பார்ப்பனிய அநீதிக்கு எதிராக போராடியதன் விளைவு, பார்ப்பனிய ஊடகங்களால் இன்று உனது கன்னித் தன்மையும், கல்வியறிவும் கழுவேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் நீ யாருக்காக போராடினாயோ அவர்கள் உனக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் ஊடக வன்முறைகளுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, பார்ப்பனிய கழுமரத்தை கழுவி துடைத்து கொண்டிருக்கிறதை பார்க்கும் போது நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தான் தோன்றுகிறது.

தயவு செய்து இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தை மனித நேயத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிரான போராட்டமாகவே சித்தரியுங்கள், அதை விடுத்து தமிழர்களின் உரிமைக்கான போராட்டமாக சித்தரித்து, உயிரை துச்சமென மதித்து களமாடிய போராளிகளின் தியாகங்களின் மீது சேற்றை அள்ளி பூசி விடாதீர்கள். மண்ணின் விடுதலைக்காக போராளிகளை போர்க்களத்திற்கு அனுப்பி விட்ட ஈழத்து தாய்மார்கள் எங்கே. தாய்க்கும் மகனுக்கும் இடையேயான சராசரி பாச போராட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் அற்புதம் அம்மாள் என்கிற சராசரி பெண்மணி எங்கே.

அற்புதம் அம்மாள் என்ற பகுத்தறிவு ஆசான் பெரியாரின் பாசறையில் பாடம் பயின்ற பெண் போராளி எப்படி சராசரியான பெண்ணாக மாறி போனார். அவரை மாற்றியது யார். எந்த அவசரத்தில் அவ்வாறு மாறி போனார். சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் பயம் கூடாது என்று பாடம் எடுத்த வெண்தாடி தாத்தாவின் கொள்கைகளை எங்கே புதைத்து விட்டார். வீணர்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு செங்கொடியின் தியாகத்தில் இருந்தாவது அற்புதம் அம்மாள் பாடம் கற்று கொண்டால் அது செங்கொடி சமூக அநீதிக்கு எதிராக பற்ற வைத்த நெருப்பு அணையாமல் இருக்க ஒரு அடி எடுத்து வைத்தது போன்று இருக்கும்.

ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது ஈழ போராட்டம், ஈழ விடுதலை என்று சொல்லி சொல்லியே ஒரு ஈன பிறவி தனது உடலை வளர்த்து இருக்கிறது. அதற்கு ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகத்தை மூலதனமாக்கி இருக்கிறது. நடிகையின் முந்தானைக்குள் சிக்கி கொண்ட அசிங்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அந்த ஈன பிறவி மறுபடியும் ஒரு முறை மூவரின் தூக்கு கயிற்றை மூலதனமாக்கி இருக்கிறது. சமூக விடுதலை இன விடுதலைக்கான போராட்ட களத்தில் இருந்து இது போன்ற ஈன பிறவிகளை அப்புறபடுத்தும் வரைக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளில் இருந்து தமிழ் தேசியத்திற்கான விடுதலை என்பது வெறும் கானல் நீரே

ஆமாம் செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய பொழுதிலும், நீ வைத்து விட்டு சென்ற நெருப்பில் போலிகளின் முகத்திரைகளும் கருகி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு அழுத்தமான பாடத்தை நீ விட்டு சென்று இருக்கிறாய் தோழி.... அது பலனை எதிர்பாராமல் எங்கே சமூக அநீதி நிகழ்ந்தாலும் அங்கே சென்று மனிதமும் நேயமும் வாழ துடிப்பவர்கள் போராட வேண்டும் என்ற அதிமுக்கியமான செய்முறை பாடத்தை.

நெருப்பில் நீ உன்னை பற்ற வைக்கவில்லை...... காலம் காலமாக உறங்கி கொண்டிருக்கும் மனசாட்சிகளையும் பற்ற வைத்து இருக்கிறாய். நீ களமாடிய களத்தில் ஆயிரமாயிரம் செங்கொடிகள் சமூக அநீதிக்கெதிரான போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்வார்கள். அவர்களுக்கு உன்னுடைய வாழ்க்கை சரியான பாடமாக அமையும்.

செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய போதும், யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் கிடந்த நீ இப்போது போராட்டத்தின் தலைமையை ஏற்று இருக்கிறாய். உயிரோடு இருந்து களத்தில் போராடிய நீ இப்போது சமூக நீதிக்கான களபோராளிகளின் மனசாட்சியாக அரியாசனத்தில் வீற்றிருந்து தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருக்கிறாய்.

நீ இறந்து விடவில்லை சகோதரியே செங்கொடி, இப்போது தான் உன் வாழ்க்கை நீ தீர்மானித்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. உன்னுடைய வாழ்நாள் தீர்மானமே சமூக அநீதிகளை தகர்த்து எறிவது தானே தோழி. இப்போது தான் உன் வாழ்க்கையை மற்றுமொரு பரிமாணத்தில் முழு வீச்சில் தொடங்கி இருக்கிறாய்.

Wednesday, September 7, 2011

கழகத்தில் கால்வாய் வெட்டியவர் அரங்கேற்றிய ரகசிய திருவிளையாடல்கள் பற்றிய கிசு கிசு

நம்மில் பலபேருக்கும் கால்வாய் வெட்டி ஆட்டையை போட்டவரின் முகத்தை பார்த்தாலே ஒரு ஜென்டில்மேன் என்று தான் சொல்ல வரும். ஆனால் உணமையில் அண்ணாத்தே எம்சிஆர் படங்களில் நம்பியார் பண்ணுகிற வில்லத்தனத்தை விட மோசமான வில்லத்தனங்களை யாருக்கும் தெரியாமல் கழக குடும்பத்தில் அரங்கேற்றி இருக்கிறார் என்பது இன்னும் யாரும் புற்றிந்திட முடியாத புதிராக தான் இருக்கிறது. பின்ன கழக தந்தையின் கைதின் போது கூடவே கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தலைமையின் குடும்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர் அல்லவா. ஆனால் பட்சி சொல்லுகிறபடி பார்த்தால் அண்ணன் அப்பவே ரெட்டை வேடம் போட்டு கொண்டு தான் அலைந்தாராம். அப்போதிருந்தே எதிர் முகாமுக்கு தகவல்களை தலைமைக்கே தெரியாமல் கடத்துவதில் அண்ணன் பயங்கர கில்லாடியாம். கூடவே அவரோட சம்பந்தியும் அதிமுகவை சேர்ந்த கல்வி தந்தை என்பதால் அவருக்கு மன்னாரன் கம்பெனி சின்னம்மாவோடு தொடர்பை பலப்படுத்தி கொள்வத்து ரொம்ப எளிமையாக இருந்தத்து. கழக தந்தையின் கைதின் போது கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தந்தையின் மனசாட்சியின் குடும்பத்தோடு நெருக்கமான அண்ணன் அப்படியே கேடி சகோதர்களை கழக தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடும் வேலையையும் நன்றாக செய்து வந்தாராம்.

அதிலும் அண்ணனுக்கு கழக தந்தையின் துணைவியாரின் குடும்பத்தை கண்டாலே ஆகாதாம். அதுவும் மனசாட்சியின் இளைய வாரிசின் பதவி பறிக்க பட்டபோது அவர் வைத்திருந்த தொலை தொடர்பு துறை அமைச்சகத்தை அண்ணன் எப்படியாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது அதில் மண் அள்ளி போடும் விதமாக கழக தந்தையின் மொழி வாரிசு அந்த அமைச்சகத்தை தனக்கு நம்பிக்கை உரியவராக கருதிய பெரம்பலூர் அரசருக்கு வாங்கி கொடுத்ததில் அண்ணன் ரொம்பவே அப்செட் ஆனாராம். ஆனால் உண்மை என்னன்னா கழக தந்தை ஆரம்பத்தில் தொலை தொடர்பு துரையை கால்வாய் வெட்டியவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அண்ணன் கால்வாய் வெட்டியதில் போட்ட பகாசுரதனமான ஆட்டையை பிரதமர் அலுவலகம் மூலம் தெரிந்து கொண்டதால் அந்த முடிவை மாற்றி விட்டு தன்னுடைய மொழி வாரிசின் முடிவையே ஏற்று கொண்டார்.

அப்போதிலிருந்தே இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி அண்ணனுக்கு அதிகமாக தொடங்கியது. அப்ப அண்ணனின் கையில் பலம் வாய்ந்த ஆயுதமாக கிடைத்தது தானாம் 2G அலைக்கற்றை விவகாரம். ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறைக்கு அரசனானதும், அவரை பற்றிய இல்லாததும் பொல்லாததுமான தகவல்களை மனசாட்சியின் இளவல்களுக்கு கடத்துவதையே தன்னுடைய பிறவி பயனாக கருதி கொள்ள ஆரம்பித்தார். ஆண்டியப்பனின் மகன், மனசாட்சியின் இளவல்களின் பல முடிவுகளை மாற்றி விட்டார் என்றும், இளவல்களுக்கு எதிராக கழக தந்தையின் குடும்பத்தில் காய் நகர்த்துகிறார் என்றும் மனசாட்சியின் இளவல்களுக்கு தூபம் போட ஏற்கனவே பதவியை இழந்த கடுப்பில் இருந்த இளவல், ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறையில் இளவல் செய்த பல குளறுபடிகளையும் அதற்கு ஆதராமான சாட்சியங்களையும் வெளியே தெரியாமல் மறைத்து இளவலை காப்பாற்றிய உண்மை கூட தெரிந்து கொள்ள முயலாமல், ஆண்டியப்பனின் மகனையும், மொழி வாரிசையும் சிக்கலில் மாட்டி விட வேண்டி 2G அலைக்கற்றை விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கினர்.

அதோடு மட்டும் இல்லாமல், அதை பற்றிய விவரங்களை ஈழத்தின் தாயிடம் தனது மன்னாரன் கம்பெனி தொடர்புகள் மூலம் கொண்டு போய் சேர்த்தவர் நம்ம கால்வாய் வெட்டி ஆட்டையை போட்ட அண்ணன் தானாம். கடைசியில் 2G அலைக்கற்றை விவகாரமே கழகம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மண்ணை கவ்வ துணைபோன காரணங்களில் முக்கியமான ஒன்றாகி போனது. அண்ணன் செய்த அப்பெரிய உதவிக்கு செய்யும் நன்றி கடனாக தான் அண்ணன் சென்னையை சுற்றியும் மற்றும் தமிழகமெங்கும் பண்ணிய நில முறைகேடுகளையும், தொழில் முதலீடுகளையும் தற்போதைய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது . இனி அப்படி எதுவும் நடந்தால் அண்ணனின் பெயர் கழக தந்தையிடம் மேலும் கேட்டு போகாமல் இருக்க “ நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன்” என்பது போன்ற நாடகமாக தான் இருக்கும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அண்ணனை விட்டால் எதிர் முகாமின் நம்பிக்கைகுரிய ஆள் உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இல்லையாம்

என்னவோ போங்கையா நீங்களும் உங்க உட்குத்து அரசியல்களும். கத்தியை எடுக்கிறவனுக்கு கத்தியால தான் சாவு என்பதை புரிந்து கொண்டால் சரி

Tuesday, September 6, 2011

டி.ஆர்.பி ரேட்டை உயர்த்த அடிக்கப்பட்ட சாகசத்தை பற்றிய கிசு கிசு .

சமீபத்தில் சட்ட பேரவை உறுப்பினர் ஒருவரின் கைபேசி பறிக்கப்பட்டதாக தகவல் எல்லா ஊடகங்களிலும் வந்தது. அது உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இந்த ஆளும் அரசு மீதான கோவத்தை அதிகரிக்க செய்தது. கழக தந்தையே அறிக்கை விடுமளவுக்கு சென்றது. ஆனால் கைபேசி பறிக்கப்பட்ட சம்பவமே சொல்லி வைத்து நடாத்தப்பட்ட சம்பவமாம் என்று பட்சி ஓன்று வந்து காதில் கிசு கிசுத்து விட்டு போய் இருக்கிறது. ஏற்கனவே கடலில் கால்வாய் வெட்டியதில் தலைவருக்கு தெரியாமல் ஆட்டையை போட்டது, சின்னம்மாவோடு தொழில் முறை தொடர்புகளை வளர்த்து கொண்டது, மத்தியில் கழக தலைமைக்கு தெரியாமல் தனி ஆவர்த்தனம் பண்ணியது என பல விதங்களிலும் கழக தந்தையின் எரிச்சலுக்கு ஆளாகியிருந்தார், கைபேசியை சட்ட சபையில் இழந்த சின்னவரின் பெரியவர். இந்த நிலையில் சமீப காலமாக தளபதியிடமும் அவருக்கு நல்ல பெயர் அவ்வளவாக இல்லை. கிட்ட தட்ட கட்சி தலைமையும் அவரை எட்டப்பன் லிஸ்ட்டில் தான் வைத்து இருந்தது. கால்வாய் வெட்டியவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமைக்கு அவரின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அதிலும் அதிமுக நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் எல்லா இடத்திலும் அமோக வெற்றி பெற, மன்னாரன் கம்பெனியின் சொந்த குடியில் கால்வாய் வெட்டியவரின் வாரிசு பெற்றது திமுக தலைமைக்கு மிகுந்த வினோதமான இன்ப அதிரச்சியை ஆரம்பத்தில் அளித்தது. என்னடா தேர்தலில் பெரிய பெரிய கழக தலைகள் எல்லாம் சுருண்டு விழ மன்னாரன் கம்பெனியின் கோட்டையில் அறிமுக நாயகன் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை அளித்து இருந்தாலும் ஆரம்பத்தில் கழக தலைவர் அதை மாவட்ட செயல் வீரரின் கடின உழைப்பென்று தான் நினைத்தார். ஆனால் உண்மை என்னன்னா சின்னவரின் வெற்றி மன்னாரன் குடும்பத்து சின்னம்மாவுக்கும், கால்வாய் வெட்டியவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாம்.


கால்வாய் வெட்டியவரின் குடும்பத்து சின்னவரின் வெற்றி பூண்டி செல்வரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும் அதனால் தான் பூன்டியார் தற்போதைய அரசால் குறிவைக்கப்படுகிறார் என்றே தளபதியும் நம்ப வைக்கப்பட்டார். பூண்டி செல்வர் கைது செய்யப்பட்டபோது கூட கால்வாய் வெட்டியவர் தன் பங்குக்கு களத்தில் இறங்கி ஒரு பகல் காட்சியை அரங்கேற்றினார். ஆனாலும் கழக தலைமைக்கு அவரின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. இப்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன் என்று மான்னாரன் கம்பெனியோடு பேசி வைத்து கொண்டு அரங்கேற்றிய கூட்டு களவாணி தனம் தான் அந்த கைபேசி பறிப்பு போன்ற செயல்கள் எல்லாம். அதாவது ஏற்கனவே கழக பெருந்தலைகள் எல்லாம் கம்பிகளுக்கு பின்னால் அனுப்ப பட்டு கொண்டிருக்க கால்வாய் வெட்டியவரும் தன்னுடைய குடும்பத்தில் இருந்தும் யாரையாவது ஆளும் கட்சி டார்கட் பண்ணியது போல் காட்சியமைப்பை அமைத்தால் தலைவரின் நம்பிக்கையை பெற முடியும் என்று நினைத்ததன் விளைவே இதெல்லாமாம் ஏற்கனவே கழக தந்தையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் கால்வாய் வெட்டியவரை மீண்டும் தலைமைக்கு நெருக்கமாக ஒரு உட்கார வைப்பதின் மூலம் தங்களுக்கு சாதகமான நிறைய தகவல்களை எதிர் முகாமில் இருந்து பெறலாம் என்று ஆளும் தரப்பும் நம்புகிறதாம். ஆனால் கழகத்தில் டி.ஆர்.பி ரேட்டு கூடுமா இல்லை இத்தோடு அதற்கு ஆப்பு வைக்கபடுமா என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை.


ஆனால் கழக தலைமை இனி டி.ஆர்.பி ரேட்டுகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கழகத்திற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து நம்பிக்கைக்குரிய தலைவர்களை உருவாக்குவது தான் கழகத்தை வலுப்படுத்த உதவும். இல்லை என்றால் முதலுக்கே மோசம் என்ற நிலையை தான் கழகம் சந்திக்க நேரிடும்


என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது கழகத்திலே, ஒண்ணுமே புரியலை உலகத்திலே... ஆனா ஒண்ணு நிச்சயம், அடிக்கிற மழையில் நரியின் சாயம் ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்காது ... கூடிய விரைவில் சாயம் கலைந்து, நரியின் குட்டு வெளிப்படும் என்றே தோன்றுகிறது.

Friday, September 2, 2011

கார்த்திகேயனின் பிறப்பு பற்றிய புராணமும் , அதை தொடர்ந்து எழும் சில கேள்விகளும்



படிப்பவர்கள் கவனத்திற்கு :

இங்கு கீழே நான் பதிந்து இருப்பது என்னுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது. யாரவது இந்த கதை மிகுந்த ஆபாசமாக இருக்குது என்று எண்ணினால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது. இந்து மதத்தில் உள்ள புனித புராணங்களில் ஒன்றான கார்த்திகேய புராணத்தை தான் நான் இங்கு தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதனுடைய ஆங்கில மூலம் பின்வரும் இணைய தளத்தில் காணப்படுகிறது http://www.astrojyoti.com/skandapurana-2.htm . மேலும். குழந்தைகளின் கண்களில் இந்த பக்கம் படாமல் படிப்பது குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு நல்லது. மேற்கொண்டு கார்த்திக் என்ற பெயர் கொண்ட யாரவது ஏன் மீது கோபப்பட்டால் அதற்கும் நான் பொறுப்பாளி ஆக முடியாது . வேண்டும் என்றால் அவர்கள் புதியதாக வேறு ஏதாவது அசிங்கபடுத்தப்படாத பெயரை தேர்ந்தெடுத்து கொள்வது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. சரி வாங்க புராணத்துக்குள்ள போவோம்



சிவாவும் பார்வதியும் தங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கந்தமதன் மலையில் மையம் கொண்டு சந்தோஷமாக அனுபவித்து கொண்டிருந்தனராம். அப்படி பட்ட அவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய கவனக்குறைவினால் பூமிக்கே மிகப்பெரிய ஆபத்து வந்ததாம்..... உடனே எல்லாருக்கும் அவங்க ரெண்டு பெரும் அப்படி என்ன கவன குறைவாக இருந்து விட்டனர் என்று கேட்கலாம்......


ஒருமுறை சிவன் பார்வதியோடு நெருங்கி உறவடிக்கொண்டிருந்தபோது சிவாவின் விந்து கொஞ்சம் தரையில் கொட்டிவிட்டது தானம் அது. அதன் விளைவாக உருவாகிய மிகக்கடுமையான வெப்பத்தால் பூமி தகிக்க ஆரம்பித்து உலக மாந்தர்கள் எல்லாரும் கதறி துடிக்க ஆரம்பித்து விட்டனராம்... அவர்களது கூக்குரல் விசுனுவிடமும் பிரம்மாவிடம் எட்டியதாம். அதை கேட்ட கண்ட விஷ்ணுவும் பிரம்மாவும் கூடி பேசி அக்னியை கொண்டு அந்த அழிவை தடுக்காலாம் என்ற முடிவுக்கு வந்து, உடனே அக்கினியை அழைத்து ஏதாவது செய்து பொங்கி வழியும் சிவனுடைய விந்தால் வரும் அழிவை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.


அக்னியும் உடனே சிவனும் பார்வதியும் சல்லாபித்து கொண்டிருந்த கந்தமாதன் மலைக்கு ஒரு துறவியின் வேடம் பூண்டு சென்றார் .அங்கு அவர் பார்வதியை பார்த்து அம்மா எனக்கு ஏதாவது பிச்சைபோடுங்கள் . பிச்சை எடுப்பதற்கு என் கையை தவிர வேறு எதுவும் இல்லை என்று கேட்டு கொண்டே பார்வதி கையில் உள்ள சிவாவின் விந்துவை பிடுங்கி அக்கினி சாப்பிட்டு விட்டார். இதை கண்டு கடும் சினம் கொண்ட பார்வதி அக்னியை பார்த்து நீ என்னை கேட்காமல் எனக்கு கிடைத்த விந்தை சாப்பிட்டு அவமதித்து விட்டாய் எனவே இன்றிலிருந்து ஒரு மாம்சம் அருந்தும் விலங்காக பிறப்பாய், அத்தோடு நீ அருந்திய விந்தினால் உன் உடம்பில் மிகுந்த வெப்பம் உண்டாகும் என்று சபித்தாள்.


பார்வதியின் சாபத்தால் அக்னியுடைய உடம்பு வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்தது . உடனே அக்னி சிவனிடம் அவ்வாறு எழுந்த உடல் வேதனையை தவிர்க்க ஏதாவதி பரிகாரம் சொல்லுமாறு கேட்டு கொண்டான். அதற்கு சிவா அக்னி தான் அருந்திய விந்துவை எதாவது பெண்களின் கருப்பையில் கொண்டு பதிந்தால் அவ்வேதனையில் இருந்து தப்பலாம் என்று பதில் அளிக்க, ஏற்கனவே தன்னுடைய உடம்பில் எழும்பிய வெப்பத்தினால் தவித்து கொண்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்த அக்கினி, அவ்வழியாக எப்படா பெண்கள் வருவார்கள் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தான்.


அப்போது மிகுந்த குளிரினால் நடுங்கிகொண்டிருந்த ஆறு கிருத்திகைகள் தங்கள் உடலை வெப்ப மூட்ட அவ்வழியே வந்ததால் அவன் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று .அப்போது அக்கினி தான் சாப்பிட்ட சிவாவுடைய விந்தை அந்த கிருத்திகைகளின் உடலில் உள்ள ஓட்டை வழியே விட்டு விட்டு போய் விட்டான் அதன் விளைவாக அவர்கள் ஆறு பெரும் கர்ப்பமடைந்தார்கள். அதை கேள்விப்பட்ட அந்த பெண்களின் கணவன்மார்கள் அவர்களை சபித்தனர். அதனால் அவர்கள் நட்சத்திரமாய் மாறி வானத்தில் குடி கொண்டனர் அவ்வாறு நட்ச்சத்திரமாய் மாறுவதற்கு முன்பு அவர்கள் தங்களுடைய கருவை இமயமலையில் விட்டு சென்றனர். அந்த ஆறு கருக்களையும் கங்கை நாணல் புற்களும் புதர்களும் நிறைந்த ஒரு ஒதுக்கு புறத்திற்கு சுமந்து சென்றது. அங்கு ஆறு கருக்களும் ஒன்றிணைந்து கார்த்திகேயன் உருவானார் .இதை பற்றி கேள்வி பட்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தனர் சிவனும் பார்வதியும் கார்த்திக்கேயன் பிறந்த இடத்திற்கு சென்றனர். பார்வதி குழந்தை கார்த்திகேயனை எடுத்து ஆரத்தழுவி கொண்டாள்



மேலே இருக்கிற புராணத்தை மொழி பெயர்த்து முடித்த பொழுது என்னுடைய மனதில் நிறைய கேள்விகள் எழும்பின அவற்றை கீழே வரிசை படுத்தி இருக்கிறேன். யாருக்கேனும் அக்கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அதை பதியுமாறு கேட்டு கொள்கிறேன்



=> உறவு வைக்கிறதர்க்கு மலை தான் கிடைச்சுதா, மலை முகட்டில் இருவரும் அப்படி இருந்தால் உலகத்தில் இருக்கும் எல்லாரும் அவர்களை பார்க்க நேரிடும் என்ற கூச்சம் இல்லாத தம்பதியர்களா அவர்கள்


=>அப்படி உறவு வைச்சதால பூமி சூடாகியது என்றால் அவர்கள் உறவின் பொது அவ்வளவு கரியமிலவாயு உருவாகியதா. இதுல இருந்து உடலுறவு வைக்கிறதுனாலதான் பூமி சூடாகுதுன்னு சொல்ல வர்றாங்களா


=>எதற்காக ரெண்டு பேர் உறவு கொள்ளும் பொது இன்னொரு கடவுள் வந்து அப்படி உறவு கொள்ளும் இன்னொரு ஆண் கடவுளின் விந்துவை குடிக்கவேண்டும் . அப்பவே வெளிநாட்டுகாரனின் போர்னோ கிராபி காணொளியை பார்த்து கடவுளர்கள் எல்லாம் கெட்டு போய் இருந்தார்களா.


=>அந்த காலத்தில் முனிவர்கள் எல்லாம் விந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்களோ என்ன ?, பிச்சை கேட்க போன இடத்தில் அடுத்தவரோட விந்தை பிடுங்கி சாப்பிடும் அளவுக்கு


=>வாடகை தாய் முறையை அப்பவே உருவாகிட்டான்களே. அது எப்படி சாத்தியம் ஆனது


=>அந்த முனிவர் உருவத்தில வந்த அக்கினி அவங்க ரெண்டு பெரும் உறவு கொள்ளும்போது விந்தை சாப்பிட்டான் என்று சொல்லபடுதே. விந்தை சாப்பிடும் அளவுக்கு இன்னொரு ஆள் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் புகுந்து, இருவரும் உறவு கொள்வதை வேடிக்கை பார்க்கிறான் என்பது கடவுளாக இருக்கும் ரெண்டு பேருக்கும் தெரியவில்லையா .


=>ஒரு குட்டி தெய்வத்தை உருவாக்குவதற்கு இத்தனை பெண்களின் கர்ப்பை சூறையாடவேண்டுமா


=>கடவுளருடைய திரு விளையாடல்கள் என்ற பெயரில் எதற்கு இவ்வளவு ஆபாசம்

Thursday, September 1, 2011

சாதி ________________ சுடப்படும் மறைக்கப்பட்ட ஓட்டை வடைகள் - அரிப்பு பாகம் -1

வாசகர்கள் கவனத்திற்கு: இங்கு படங்களில் இருக்கும் வார்த்தை விளையாட்டுகள் என்னுடைய சொந்த கருத்துகள் கிடையாது . ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு சில அறிவாளிகளால் இணையத்தில் பதியப்பெற்ற மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளின் வரலாறை படிக்க நேர்ந்தது. அதை எல்லாரும் படித்து இன்புறும் வண்ணம் அவற்றை படம் பிடித்து இங்கே ஒட்டியுள்ளேன். இந்த வரலாற்று கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை என்னிடம் கிடையாது அவை யாவும் ஓட்டை வடைகளின் வரலாற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளையே சாரும். குழந்தைகளை அருகில் வைத்து கொண்டு இதை படிக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.



From 2 September 2011


என்னமா யோசிக்கிறாய்ங்க..... காமராசர் சுயசாதி பற்றினால் தான் கன்னியாகுமாரியை தமிழ்நாட்டோடு இணைத்தாராம். குமுளி , பீர்மேடு போன்ற பகுதிகளில் எல்லாம் அவரோட சாதிக்காரங்க இல்லையாம்..... அட பாவி மக்கா .... அந்த கால கட்டத்தில் காமராசர் மொழிவாரியாக மாநிலத்தை பிரித்ததை ஆதரிக்காத பக்கா தேசியவாதி என்பது பலருக்கும் தெரிந்ததே. கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைக்க போராடியவர்களில் முக்கியமானவர் மார்சல் நேசமணி. உண்மைய சொல்ல போனால் கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று காமராசர் அக்கறை காட்டியதே இல்லை. உண்மை இப்படி இருக்கையில் தன்னோட சாதிகாரங்களுக்காக குமரியை தமிழ்நாட்டோடு இணைத்தார் என்பது சாதிய மனப்பான்மையோடு கர்ம வீரர் மீது அள்ளி தெளிக்கும் அவதூறுகளே அன்றி வேற என்னவாக இருக்க முடியும். ஏதோ குமரியில் நாடார் சாதிக்காரங்க மட்டும் தான் இருக்கிறாங்களா என்ன. அப்படி பேசுவது குமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க பாடுபட்டவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவதாகும் என்று இந்த அறிவாளிகள் என்று தான் புரிந்து கொள்ள போகிறார்களோ. முத்துராமலிங்கத்தை விட இந்திய தேசியத்தின் மீது பன்மடங்கு பற்றுகொண்டவர் காமராசர் என்பதும் அதினாலேயே அன்றைய திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்ட்டார் என்பதும் வரலாறு


From 2 September 2011


காமராசரை சுயசாதி பற்றுள்ளவர் என்று கூறியவரின் சுய சாதி வெறி நாடறிந்தது தானே. கமாராசரை ஒரு குறுப்பிட்ட சாதியின் தலைவராக சுருக்க என்னமா திட்டம் போடுறாங்க. சுயசாதி வெறியினால் ஏனைய சாதியை சேர்ந்தவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர் காமராசரை பார்த்து சுய சாதிவெறியர் என்று கூறியதாக சொல்லபடுவது தான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கும்



From 2 September 2011


விருதுநகர் வியாபாரிகள் மட்டும் தானா கலப்படத்தில் ஈடுபட்டார்கள், அப்போது வியாபார தொழிலை தங்களுடைய சாதிய ரீதியான உரிமையாக கருதி கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் கலப்படத்தில் ஈடுபடவில்லையா. விருதுநகர் வியாபாரிகள் என தனியா குறுப்பிட்டு அவர்கள் கலப்படத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதே, கடுமையான உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறி கொண்டிருந்த ஒரு குறுப்பிட்ட சமூகத்தவர்களின் முன்னேற்றத்தை குலைக்க, அப்போதைய சூழலில் எல்லா விதமான வியாபாரங்களில் ஆளுமை செய்து கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் முத்துராமலிங்கத்தை கருவியாக பயன்படுத்தினதற்கான முக்கிய சான்றாகும்.

அ துசரி அவரு அவரை சுற்றி இருந்த அடி பொடிகளை தூண்டி விட்டு மக்கள் குடிக்க நீர் எடுக்கும் கிணறுகளில் மனித மலத்தையும் மண்ணெண்ணையையும் ஊற்றி கலப்படம் செய்ததை விடவா விருதுநகர் வியாபாரிகள் செய்து விட்டார்கள்



From 2 September 2011


கூடை வியாபாரிகளான நாடார்கள், கலப்படம் , நாடார் வியாபாரி என்னை வெட்டுவேன் என்று கூறினார் , வெட்டினால் வெட்டட்டும் ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் தோன்றுவார்கள்..... போன்றதான வார்த்தைகள் அன்றைய கால கட்டத்தில் தங்களுடைய உழைப்பால் முன்னேறி கொண்டு இருந்த ஒரு சமூகத்திற்கு எதிராக என்ன மாதிரியான வெறுப்பை கக்கி இருக்கிறார் என்பதற்கான வரலாற்று அடையாளங்கள்.


ம்ம்ம்ம்ம்ம் ஒரு முத்துராமலிங்கம் பிறந்ததினால் தமிழகத்தில் ஏற்பட்ட சாதிய ரீதியான வன்முறைகள் இன்னும் ஒழியலை ...... ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் பிறந்திருந்தால் ...... தாங்காதுடா சாமீ..... இந்நேரம் ஒட்டு மொத்த தமிழ்நாடும் சுடுகாடா தான் இருந்திருக்கும்.


ஆயிரமாயிரம் தினகரன்களும் , கல்யாணிகளும் பிறக்க மாட்டார்களா, சமூகத்தில் சாதி ரீதியான பிளவுகளை அடித்து நொறுக்க , என்ற ஏக்கம் தான் மிஞ்சி நிற்கிறது.


From 2 September 2011


காமராசர் கள்ள நோட்டு அடித்தார் , பெரும்பாலான பிரபலமான பத்தாயிரம் பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது ...... என்பது போன்ற தகவல்கள் மூலம், பார்ப்பனிய வேசியம் எவ்வளவு வீரியமாக ஏழைகளின் கல்வி தந்தை காமராசருக்கு எதிராக செயல் பட்டு இருந்து இருக்கின்றன என்பது நன்கு தெரிகிறது. ம்ம்ம்ம் கர்மவீரர் எப்படி பட்ட சவால்களை எல்லாம் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.... அன்றைக்கு அய்யா பெரியார் மட்டும் காமராசருக்கு பக்க துணையாக இல்லைன்னா காமராசரை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பாய்ங்க போல ..


இவரு தூக்கத்துல எதையாவது யோசித்து விட்டு வந்து அதையே நான் கேள்வி படுகிறேன் சந்தேகப்படுகிறேன் என்று சொல்லி விட்டால் உடனே இவரு சந்தேகபடுகிற ஆட்களை குற்றவாளியாக்கி தண்டனை குடுத்திடனும்...... தங்க முடியலப்பா ....... இவரு பட்ட சந்தேகத்துக்கெல்லாம் கர்ம வீரர் இவரு மேல கேசு போட்டிருந்தார்ன்னா...அவரு ஆட்சி பண்ணி இருக்க முடியாது நீதிமன்ற வாசலில் ஒரு கூடாரம் அடித்து குந்திக் கொண்டு தான் இருந்திருக்க வேண்டும்


ஒண்ணு மட்டும் நல்லா தெரிகிறது, பார்ப்பனியத்துக்கு முத்துராமலிங்கம் நல்ல அடியாளாக செயல்பட்டு இருக்கிறார்


From 2 September 2011


காமராசரால் தேசிய வியாதிகளுடைய மனம் உடைந்து போனதோ இல்லையோ..... ஆனால் தான் வளர்த்து விட்ட இந்திரா என்னும் பார்ப்பனிய கடா அவசரகால நெருக்கடியின் போது தன் மீதே பாய போவதை எண்ணி அதை சீரணிக்க முடியாமல் மனம் நொந்தவராக தான் கர்ம வீரர் இறந்து போனார் என்பது வரலாறு. காலம் பூரா அவர் எந்த தேசியத்துக்கு பாடுபட்டாரோ அந்த தேசியம் தான் அவரை சிறையில் போடவும் துணிந்தது. அது தான் வேதனையான உண்மை.

ஒரு கேள்வி நம்ம முத்துராமலிங்கம் எத்தனை கட்சிக்கு தான் ஒரே நேரத்தில் தலைவராக இருந்தாரு.... பார்வர்டு பிளாக் கட்சிகாரறு எப்படி சீர்திருத்த காங்கிரசின் தலிவரானார் ... ஒண்ணுமே புரியலையே


From 2 September 2011


முத்துராமலிங்கம் பண்ணியதிலேயே உச்சகட்ட காமடின்னு சொன்னா அது சுபாசை பர்மாவில் பார்த்தேன், போர் முனையில் பார்த்தேன், மூன்றாம் உலக போர் தொடங்கும் , சுபாசு தன்னுடைய சேனைகளோடு இந்தியாவிற்குள் நுழைவார் என்று சாமத்தில் வரும் சக்கம்மா குடு குடுப்பைகாரர் மாதிரி கட்டியம் கூறி கொண்டு அலைந்தது தான்.

ஆமா நேருவுக்கு முத்துராமலிங்கத்தை தெரியுமா என்ன ..... வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி தான்னு சொல்லி கொண்டு அலைந்தது போல் இருக்கிறது.

ஆகத்து 15 பாரத தாய்க்கு ரெட்டை விலங்கு பூட்டப்பட்ட நாளோ இல்லையோ ..ஆனால் பாரதத்தின் கற்பு வெள்ளைக்காரர்களால் அடிமாட்டு விலைக்கு பார்ப்பனியத்திடம் விற்கப்பட்ட நாள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.



From 2 September 2011


முத்துராமலிங்கத்தால் தூண்டி விடப்பட்டு பற்றி எரிந்த சாதி கலவரத்துக்கு காரணம் காமராசராம். இந்த கோமாளித்தனத்தை நினைத்து எங்க போய் முட்டி கொள்ள என்று தெரியவில்லை. ஆனால் மேல இருக்கிறவற்றை பதிந்தவர் ஒரு மாதிரியான சாதிய வெறித்தனத்தோடு கர்ம வீரரை சாதி வெறியராக காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கடைசியில் அவரே ஒரு கோமாளி ஆகி இருக்கிறார்.


பார்ப்பனியத்துக்கு கைக்கூலியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அத்துணை அடக்குமுறைகளையும் ஏவி விட்ட ஒருவரை கொண்டாடுவதும், சாதி மத பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் கல்வி அறிவை பெற வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வந்தவரை சாதி வெறியராக காட்ட முயற்சிப்பதும் சமூக ரீதியாக நன்மை பயக்கும் பரிணாம வளர்ச்சி கிடையாது, அது பரிதாபகரமான அழிவுகளை தேடுவதற்கான முன் முயற்சி என்று தான் கூற முடியும்


இப்படியெல்லாம் மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளை பற்றி ஆராய நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு சக மனிதர்களோடு மனிதர்களாக சரிசமமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்தல் நலம் என்று தோனுகிறது ....

மறைக்கப்பட்ட ஒட்டைவடைகள் பற்றிய பதிவுகள் தொடரும்